CSK : 2023 சீசனில் ஜடேஜா எந்த அணிக்காக விளையாடுவார்? தோனியே நேரடியாக தலையீடு – பரபரப்பு தகவல்

Jadeja
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்த ஆண்டிற்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழத்துவங்கியுள்ளது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது அடுத்த மார்ச் இறுதியில் துவங்கும் என்று கூறப்படும் வேளையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் மினி ஏலமும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jadeja

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதால் அவருக்கு பதிலாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவரது தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி மிகவும் மோசமான நிலையை எட்டியதால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனியை நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஜடேஜா காயத்தை காரணம் காட்டி அந்த தொடரில் இருந்தே முழுமையாக விலகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்திலும் சிஎஸ்கே அணியை பின்தொடர்வதை நிறுத்திய ஜடேஜா சிஎஸ்கே அணியில் தொடர மாட்டார் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

jadeja

மேலும் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு எழுந்து விட்டதாகவும், அதனால் அவர் இனி தனது சொந்த மாநிலமான குஜராத் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டுகிறார் என்றும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. அதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மினி ஏலத்தில் அவர் வேறு அணிக்கு செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனியார் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ள உறுதியான தகவலின் படி :

- Advertisement -

ஜடேஜாவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் இருந்தாலும் ஜடேஜா அடுத்த ஆண்டு 2023-இல் சிஎஸ்கே அணிக்காகத்தான் விளையாடுவார் என்றும் அவருக்காக தோனி சிபாரிசு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணியில் 7 ஆவது இடத்திற்கு அவரை தவிர்த்து வேறு யாரும் அந்த இடத்தில் பொருத்தமாக இருக்க முடியாது என்பதாலும், ஜடேஜாவின் மீது கேப்டன் தோனி அதிக அளவு நம்பிக்கை வைத்திருப்பதாலும் நிச்சயம் அடுத்த ஆண்டு ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவை தோக்கடித்தால் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன் – பாக் நடிகை பரபரப்பு அறிக்கை

மேலும் ஜடேஜாவிற்கு ஆதரவளித்து தோனியே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதன் காரணமாக கட்டாயம் ஜடேஜா அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. தோனி விளையாடப்போகும் கடைசி ஐ.பி.எல் தொடராக அடுத்த 2023 சீசன் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement