இந்தியாவை தோக்கடித்தால் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன் – பாக் நடிகை பரபரப்பு அறிக்கை

PAK-Actress
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பது தெரிந்து விடும். அந்த வகையில் குரூப் இரண்டில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வேளையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில் இந்தியா அடுத்ததாக நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற வேண்டும்.

அதேபோல பாகிஸ்தான் தங்களுக்கு எஞ்சியிருக்கும் கடைசி போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியானது ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா கடைசி தோல்வி அடைய வேண்டும் என்று பாகிஸ்தான் நடிகை ஒருவர் ஜிம்பாப்வே அணியிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து தனது அதிகாரபூர்வ பக்கத்தில் செய்துள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வகையில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த டிவீட்டில் பதிவிட்டுள்ளார். இந்த டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகவே அதற்கு சமூக வலைதளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து பதில் அளித்த சில நெட்டிசன்கள் : இந்த டீல் மிகச் சிறப்பாக இருக்கிறது ஒருவேளை. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார்கள். பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி கிரிக்கெட் மற்றும் அல்லாமல் மேலும் சில ட்வீட்களை இதேபோன்று செய்துள்ளதால் நிச்சயம் இதனை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவை அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸை பாராட்டி விராட் கோலி தாமாக கொடுத்த பரிசு – ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாகிஸ்தான் நடிகையான ஷின்வாரி ஹைதராபாத்தில் பிறந்தவர் என்பதும் பின்னர் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்த அவர் 2004 ஆம் ஆண்டு “ஷேர் சாவா ஷேர்” என்ற நகைச்சுவை தொடரின் மூலம் தனது நடிப்பை துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement