IPL 2023 : என்னோட மதிப்பு தெரில, சிஎஸ்கே ரசிகர்களை நேரடியாக தாக்கிய ஜடேஜா – ரசிகர்கள் அதிருப்தி, நடந்தது என்ன?

Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றில் மே 28ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த அந்த அணி மே 23ஆம் தேதியான நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ருதுராஜ் 60, டேவோன் கான்வே 40 என தொடக்க வீரர்களின் பொறுப்பான ரன் குவிப்பால் 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய குஜராத் முதல் ஓவரிலிருந்தே சென்னையின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சுப்மம் கில் 42 (38) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா, சஹர், பதிரனா, ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றிக்கு 60 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் பேட்டிங்கில் 22 (16) ரன்களும் 2 விக்கெட்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினர்.

- Advertisement -

தாக்கிய ஜடேஜா:
அதனால் “அப்ஸ்டாக்ஸ் மிகவும் மதிப்புள்ள வீரர்” என்ற ஸ்பெஷல் விருதையும் தன்னுடைய ஆட்டத்திற்கு பரிசாக ஜடேஜா வென்றார். ஆனால் அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “தம்முடைய மதிப்பு அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்திற்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை” என சென்னை ரசிகர்களை வெளிப்படையாக தாக்கியுள்ளார். அதாவது இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று 4 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக திகழும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற சென்னைக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

அதனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள எதிரணி ரசிகர்கள் கூட ஆர்வம் காட்டுகின்றனர். அந்த நிலையில் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் பெரும்பாலும் கடைசி பேட்ஸ்மேனாக 8வது இடத்தில் விளையாடி வருகிறார். மேலும் வயது காரணமாக இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் பேட்டிங் செய்வதை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று விரும்பும் ரசிகர்கள் அவருக்கு முன்பாக களமிறங்கும் ஜடேஜாவிடம் “முதல் பந்திலேயே அவுட்டாகுங்கள் அப்போது தான் தோனி விளையாடுவதை பார்க்க முடியும்” என்று வெளிப்படையாகவே பேனரில் எழுதி வைத்து கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -

அந்த குருட்டுத்தனமான பாசத்தால் ஜடேஜா அவுட்டானதும் அதை வெறித்தனமாக கொண்டாடும் சென்னை ரசிகர்கள் தோனி களமிறங்குவதை மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். சென்னை ரசிகர்கள் அப்படி செய்வதில் தவறில்லை என்றாலும் அதே அணிக்காக விளையாடும் தமக்கு ஆதரவு கொடுக்காமல் இப்படி அவுட்டாவதை கொண்டாடுவது நிச்சயமாக ஜடேஜாவுக்கு அதிருப்தியை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.

சொல்லப்போனால் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் வலியுடன் விளையாடுவதாக ஒரு ரசிகர் போட்ட ட்விட்டை லைக் செய்த ஜடேஜா சென்னை ரசிகர்களால் மன உளைச்சலில் இருக்கிறேன் என்பதை கடந்த வாரம் காட்டினார். அந்த நிலையில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி பெற்றும் ஜடேஜாவை கடைசி நேரத்தில் தோனி திட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அடுத்த நாளே கர்மா சம்பந்தமான ட்வீட் போட்ட அவர் மீண்டும் சென்னை அணியுடன் மோதலில் ஈடுபட்டாரா என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:IPL 2023 : 3 தொடர் தோல்விகள், தனி ஒருவனாக போராடி 4வது முயற்சியில் குஜராத்தை சாய்த்த ருதுராஜ் – மாஸ் புள்ளிவிவரம் இதோ

அந்த சந்தேகம் ஓய்வதற்குள் தமது அருமையை சென்னை ரசிகர்கள் உணரவில்லை என்று மீண்டும் அவர்கள் ட்விட்டரில் தாக்கியுள்ளார். இருப்பினும் இந்தியாவுக்காக டிராவிட் அவுட்டாகும் போது சச்சின் களமிறங்குவதை கொண்டாடுவதால் டிராவிட்யை வெறுப்பதாக அர்த்தமா? என்று தெரிவிக்கும் சென்னை ரசிகர்கள் இதே போட்டியில் நீங்கள் விக்கெட்டுகளை எடுத்த போதும் பவுண்டரிகளை அடித்த போதும் நாங்கள் கொண்டாடியதை பார்க்கவில்லை என்று ஜடேஜா மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement