- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் இது மட்டும் நடக்கக்கூடாதுனு நெனச்சேன் – ரவீந்திர ஜடேஜா வருத்தம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது.

இந்த தோல்வியை ஏத்துக்க முடியல :

இந்திய அணியின் இந்து சரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

நவம்பர் ஒன்றாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 235 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது.

இதன் காரணமாக 149 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இன்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா கூறுகையில் : தனிப்பட்ட முறையில் நான் ஓய்வு பெறும் வரை இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழக்காது என்று தான் நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையிலேயே நாங்கள் தொடர்ச்சியாக 18 தொடர்களை இந்திய மண்ணில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகவும் வருத்தம் அளித்து விட்டது. ஏனெனில் நான் ஓய்வு பெறும் வரை டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்திய மண்ணில் இழக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் தற்போது அது நடந்து விட்டது. நாங்கள் எங்களின் மீது பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டோம்.

இதையும் படிங்க : நான் ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் இது மட்டும் நடக்கக்கூடாதுனு நெனச்சேன் – ரவீந்திர ஜடேஜா வருத்தம்

12 ஆண்டுகளாக எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் விளையாடி வந்த நாங்கள் இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் 5 போட்டியில் மட்டுமே தோற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இப்பொழுது இந்த தொடரில் அடைந்த தோல்வியை எனக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டும் வருவோம் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -