ஆசியக்கோப்பை : ரிஷப் பண்ட் ஏன் சேர்க்கப்படவில்லை. சாமர்த்தியமான பதிலளித்த – ரவீந்திர ஜடேஜா

Jadeja-3
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் ஆசியக் கோப்பை தொடரானது நடைபெற்ற வருகிறது. ஆசிய கண்டத்தினை சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஆண்களுக்கு இடையேயான போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 28ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான அணி 147 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்த வேளையில் இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக மாறியது.

இந்நிலையில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம் என்றாலும் இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அதனால் ரிஷப் பண்ட் இந்த போட்டியை தவற விடுகிறார் என்றும் தெளிவாக அறிவித்திருந்தார்.

Rishabh Pant 44

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா ரிஷப் பண்ட் நீக்கம் குறித்து பேசுகையில் : எனக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு ஐடியாவும் கிடையாது என்னை பொறுத்தவரை இந்த கேள்வி அவுட் ஆப் சிலபஸ் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எப்பொழுதுமே எந்த போட்டியாக இருந்தாலும் சரி பிரஷர் என்பது நமக்கு இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி பல அழுத்தமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளது. இன்றைய போட்டியில் ஒரு ஆல் ரவுண்டராக நான் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் என ஜடேஜா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜடேஜாவின் நீக்கம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அவரது இந்த நீக்கம் அவுட் ஆப் சிலபஸ் எனவே இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஓய்வா? – வெளியான தகவல்

சமீபகாலமாகவே தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் அசத்தி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே ரிஷப் பண்ட் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement