சி.எஸ்.கே அணிக்கு புதிய கேப்டன். தோனி தானாக முன்வந்து விலகுகிறார் – வெளியான திட்டம் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் மாதம் 15-வது ஐபிஎல் சீசனானது நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது ஐபிஎல் தொடருக்கான திட்டங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

csk 1

- Advertisement -

இவ்வேளையில் சென்னை அணியில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த தலைமுறைக்கு வழி விடும் நோக்கத்தில், அணியின் நலன் கருதி, எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் களத்தில் ஜடேஜாவுக்கு ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்துவார் என்றும் தெரிகிறது.

Jadeja

ஏற்கனவே தோனி அடுத்த பத்தாண்டிற்கான சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்று கூறி இருப்பதன் காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரர்களை தேர்ந்தெடுத்து வளர்த்துவிடும் பணியில் செயல்பட இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீர் விலகல். என்ன காரணம்? – வெளியான ஷாக்கிங் நியூஸ்

சி.எஸ்.கே அணி சார்பாக தக்கவைக்கப்பட்ட 4 வீரர்களில் முதல் நபராக ஜடேஜா 16 கோடிக்கும், தோனி 12 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரை தவிர்த்து மொயின் அலி (8 கோடி) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement