டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீர் விலகல். என்ன காரணம்? – வெளியான தகவல்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் அந்த வடிவ கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டபோது பிசிசிஐ மூலமாக அவரது ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விராட் கோலி இன்று திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் வைத்து இருக்கும் விராட் கோலி தற்போது திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது : 7 வருட கடின உழைப்பு டெஸ்ட் கிரிக்கெட்க்காக அளித்துள்ளேன். இந்திய அணி தற்போது சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிச்சயம் என்னுடைய பணியை நேர்மையாக செய்துள்ளதாக கருதுகிறேன்.

இருப்பினும் எந்த ஒரு விடயமும் ஒரு இடத்தில் நின்று தான் ஆக வேண்டும். அந்த வகையில் என்னுடைய டெஸ்ட் கேப்டன் பதவியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன். 7 ஆண்டுகாலமாக தலைமை தாங்கிய நான் இந்திய அணிக்காக 120% சதவீத என்னுடைய உழைப்பை அளித்துள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஸ்டம்ப் மைக் அருகில் சென்று பேச என்ன காரணம்? அப்போ என்ன நடந்தது – விராட் கோலி கொடுத்த விளக்கம்

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பி.சி.சி.ஐ-க்கு மிகவும் நன்றி. நீண்ட ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்த என்னை அனுமதித்த அவர்களுக்கு நன்றி. என்னுடைய விளையாடிய சக வீரர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி இந்த பயணம் ஒரு மறக்க முடியாத பயணம் என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement