ஸ்டம்ப் மைக் அருகில் சென்று பேச என்ன காரணம்? அப்போ என்ன நடந்தது – விராட் கோலி கொடுத்த விளக்கம்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டீன் எல்கருக்கு எதிராக கொடுக்கப்பட்ட டி.ஆர்.எஸ் முடிவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் தங்களது எதிர்ப்பை மைதானத்திலேயே வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி கோபத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் விராட் கோலி ஆகியோர் சற்றும் மோசமாகவே நடந்து கொண்டனர் என்றும் கூறலாம்.

Drs1

- Advertisement -

அதிலும் குறிப்பாக விராட் கோலி ஸ்டம்ப் மைக் அருகில் சென்று பேசியது மிகப் பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கோலி தான் ஸ்டம்ப் மைக் அருகில் சென்று பேசினேன் என்பது குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

களத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளியில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது என்று என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போட்டியின் ஒரு தருணம் அதனை நாங்கள் கடந்து வந்துவிட்டோம். அப்போது 2-3 விக்கெட்டுகள் விரைவாக எங்களுக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் போட்டி நமக்கு சாதகமாக மாறி இருக்கும் என்று கோலி கூறியுள்ளார்.

stump

இரண்டாவது இன்னிங்சின் போது நடைபெற்ற இந்த சம்பவம் போட்டியின் முக்கியமான ஒரு திருப்புமுனையாக இந்திய அணிக்கு அமைந்தது. ஏனெனில் மார்க்ரம் ஆட்டமிழந்ததும், எல்கரும் உடனேயே அவுட்டாகி வெளியே இருந்தால் தென்னாபிரிக்க அணி சிக்கலைத் சந்தித்திருக்கும். ஆனால் அப்படி விக்கெட் கிடைக்காமல் போக அவர்களால் எளிதாக ரன் குவிக்க முடிந்து வெற்றியும் பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ தொடரில் இந்திய அணியை சாய்க்க உருவெடுத்த அறிமுக வீரர் – யார் தெரியுமா?

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement