தெ.ஆ தொடரில் இந்திய அணியை சாய்க்க உருவெடுத்த அறிமுக வீரர் – யார் தெரியுமா?

jansen 1
Advertisement

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்தமண்ணில் இந்தியா துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1 என வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா “சொந்த மண்ணில் நாங்கள் தான் ராஜா” என்று நிரூபித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வென்றதால் இத்தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு பிரகாசமானது. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் முக்கியமான தருணங்களை கோட்டை விட்டதால் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு மீண்டும் கனவாகவே போனது.

INDvsRSA

நம்பர் ஒன் இந்தியா:
இத்தனைக்கும் விராட் கோலி தலைமையில் புஜாரா, ரகானே என அனுபவமும் ராகுல், பண்ட், பும்ரா, ஷமி என திறமை நிறைந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா திகழ்ந்தது. மறுபுறம் டீன் எல்கர் தலைமையில் ஒரு சில அனுபவ வீரர்களுடன் நிறைய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக் கொண்டு நம்பர் ஒன் அணியான இந்தியாவை தென்னாப்பிரிக்கா சாய்த்து காட்டியுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்க அம்சமாகும்.

- Advertisement -

இத்தனைக்கும் அந்த அணியின் மின்னல் வேகப்பந்து வீச்சாளர் நோர்கியா இந்த தொடரின் ஆரம்பத்திலேயே காயம் காரணமாக விலகினார். அதேபோல் முக்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் இந்த தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்றார். சரி இவை அனைத்தையும் தாண்டி தென்னாப்பிரிக்காவால் எப்படி இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்பது பற்றி பார்ப்போம்:

bumrah

1. மார்கோ யான்சென் மேஜிக்: தென்ஆப்பிரிக்க அணியில் ககிசோ ரபடா, லுங்கி நிகிடி என தரமான 2 பவுலர்கள் இருக்கிறார்கள் என்றால் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி என தரமான 2 பவுலர்கள் இருந்தனர். ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 3வது வேகப்பந்து வீச்சாளராக இருந்த இளம் வீரர் மேக்ரோ யான்சன் இந்த தொடரில் 3 போட்டிகளில் 19 விக்கெட்களை வெறும் 16 என்ற சராசரியில் எடுத்தார்.

- Advertisement -

இங்கு தான் தென்ஆப்பிரிக்காவுக்கு மேஜிக் நிகழ்ந்துள்ளது. ஆம் இந்திய அணியில் 3, 4வது வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடிய தாகூர், சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த 3 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் தான் எடுத்துள்ளனர். மறுபக்கம் யான்சன் 19 விக்கெட்களை எடுத்து இரு அணிகளுக்கிடையே வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டார். இந்திய அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த இவர் இத்தொடரில் தான் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Bavuma

2. மிடில் ஆர்டர் :
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்கள் குவிப்பது அவசியம். அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரை விட தென்ஆப்பிரிக்காவில் இடம் வகித்த அனுபவம் இல்லாத மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

இதில் பீட்டர்சன் 276 ரன்களும், பவுமா 221 ரன்கள் குவிக்க ராசி வேன் டர் டுஷன் முக்கியமான 117 ரன்கள் எடுத்தார். ஆனால் இவர்களை விட அதிக அனுபவங்களைக் கொண்ட விராட் கோலி 161 ரன்களும், புஜாரா 124 ரன்களும், ரகானே 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

IND

3. கோலியின் தவறான அணுகுமுறை :
இந்த தொடரில் 2வது போட்டியில் தோற்ற பின்பும் கூட அணியில் மாற்றங்களை செய்ய கேப்டன் விராட் கோலி விரும்பவில்லை. குறிப்பாக புஜாரா – ரகானே ஆகியோரில் யாரேனும் ஒருவரையாவது மாற்றியிருக்க வேண்டும்.

- Advertisement -

அப்போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவை தேர்வு செய்ததும் தவறான ஒன்றாகும். ஏனென்றால் இந்தியாவை விட சற்று அதிகம் உயரமாக உள்ள தென்ஆப்பிரிக்க பவுலர்கள் தென்னாப்பிரிக்க மைதானங்களில் கிடைக்கும் “எக்ஸ்ட்ரா பவுன்ஸ்” பந்துகளை சிறப்பாக பயன்படுத்தி எளிதாக விக்கெட்டுகளை எடுக்கிறார்கள் என 2வது டெஸ்ட் போட்டியில் தோற்ற பின் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.

இதையும் படிங்க : ஊராடா இது, 21ஆம் நூற்றாண்டில் இந்த மாதிரி பிட்ச்ச பார்த்ததே இல்ல! கதறும் ஸ்பின்னர்கள் – நடந்தது என்ன?

ஆனால் 3வது போட்டியில் இந்திய அணியிலேயே உயரமாக இருக்கும் பவுலர் இஷாந்த் சர்மாவை தேர்வு செய்யாமல் உமேஷ் யாதவை விராட் கோலி தேர்வு செய்தார்.

Advertisement