ஊராடா இது, 21ஆம் நூற்றாண்டில் இந்த மாதிரி பிட்ச்ச பார்த்ததே இல்ல! கதறும் ஸ்பின்னர்கள் – நடந்தது என்ன?

- Advertisement -

தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்று அசத்தியுள்ளது, கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்த இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்து பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடரில் பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தபோதிலும் இந்தியாவின் தோல்விக்கு மிக மோசமான பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

IND

எடுபடாத ஸ்பின் பௌலிங்:
இந்த தொடரில் இரு அணிகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாகவும் அதிரடியாகவும் பந்துவீசி பேட்டர்களை திணற அடித்தார்கள். இந்தியாவின் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா தென்னாபிரிக்காவின் ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி என இரு அணிகளைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

ஆனால் இதன் தொடரில் நடந்த 3 போட்டிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்களின் நிலைமை அதோ கதியாக இருந்தது. இரு அணிகளிலும் இடம் பிடித்திருந்த சுழல் பந்துவீச்சாளர்களான இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் ஆகியோர் இந்த தொடரில் விக்கெட்டுகளை எடுக்க திண்டாடினார்கள் என்றே கூறலாம்.

Ashwin

ஊராடா இது:
பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகம் அளிக்கும் தென்னாப்பிரிக்க மைதானங்கள் இம்முறையும் தனது வேலையை காட்டி அவர்களுக்கு மட்டுமே உதவி அளித்தது. சுழல் பந்து வீச்சாளர்களுக்கு கருணையே காட்டவில்லை. எப்படி என்றால் இந்தத் தொடரில் நடந்த 3 போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 106 விக்கெட்டுகள் விழுந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 102 விக்கெட்டுகள் சாய்த்தனர், வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே சுழல் பந்துவீச்சாளர்கள் எடுத்தனர்.

- Advertisement -

21ஆம் நூற்றாண்டு:
இதில் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் மகாராஜுக்கு வெறும் 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது. சொல்லப்போனால் “21ஆம் நூற்றாண்டில் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் இந்த தொடரில் தான் சுழல்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்” என்பது நம்மை அதிரச் செய்கிறது.

Ashwin

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்த விக்கெட்டுகளை எடுத்த தொடர்களின் பட்டியல் இதோ: வெஸ்ட்இண்டீஸ் – இங்கிலாந்து (வெஸ்ட்இண்டீஸ் மண்ணில்), 1989/90 : 0 விக்கெட்கள். தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா (தென்ஆப்பிரிக்க மண்ணில்), 1902/03 : 2 விக்கெட்கள், ஜிம்பாப்வே – பாகிஸ்தான் (ஜிம்பாப்வே மண்ணில்), 1994/95 : 3 விக்கெட்கள், தென்ஆப்பிரிக்கா – இந்தியா (தென்ஆப்பிரிக்க மண்ணில்), 2021/22* : 4* விக்கெட்கள் (இந்த தொடர்)

இதையும் படிங்க : அந்த விக்கெட்ல வந்த சர்ச்சையும் நாங்க ஜெயிக்க சாதகமா அமைஞ்சிடுச்சி – உண்மையை சொன்ன டீன் எல்கர்

இதை பார்க்கும்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள பிட்ச்கள் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சுத்தமாக கை கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் பந்துவீசும் சுழல் பந்துவீச்சாளர்களின் மைண்ட் வாய்ஸ் “ஊராடா இது” என இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement