அந்த விக்கெட்ல வந்த சர்ச்சையும் நாங்க ஜெயிக்க சாதகமா அமைஞ்சிடுச்சி – உண்மையை சொன்ன டீன் எல்கர்

Elgar
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது, முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி பெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் கொதித்தெழுந்த தென் ஆப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வென்றது. விராட் கோலி தலைமையிலான உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியை வெறும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு சாய்த்த டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.

Bavuma

- Advertisement -

சர்ச்சையான டிஆர்எஸ்:
இந்த போட்டியில் 3வது நாளில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அந்த அணி கேப்டன் டீன் எல்கர் மீண்டும் நிதானத்துடன் பேட்டிங் செய்து வந்தார். அப்போது அபாரமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார்.

ஆனால் அதை எல்கர் ரெவியூ செய்ய அந்த பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றதால் நாட் அவுட் – கொடுக்கப்பட்டது. இருப்பினும் களத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அம்பயர் “மரஸ் எரஸ்மஸ்” இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை என கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

Drs1

கை நழுவிய வெற்றி:
இதனால் மிகவும் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கடுமையான வார்த்தைகளை ஸ்டம்ப் மைக்கில் தெரிவித்தார்கள் ஏனெனில் இந்த தொடரின் 2வது போட்டியில் 96* ரன்கள் விளாசி வெற்றிபெற டீன் எல்கரின் விக்கெட் மிகவும் முக்கியமானதாகும்.

- Advertisement -

அந்த சமயத்தில் 60/1 என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர் இறுதியில் அவுட் ஆனபோது 101/2 என நல்ல நிலையை எட்டிவிட்டதால் இந்தியாவின் வெற்றி கைநழுவிப்போனது என்றே கூறலாம்.

Drs

சாதகமா அமைஞ்சுது:
இந்நிலையில் அந்த டிஆர்எஸ் தங்களின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக டீன் எல்கர் தற்போது கூறியுள்ளார். இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின்னர் நிகழ்ந்த விரிவான செய்தியாளர்கள் சந்திப்பில், “அது எங்களுக்கு 3வது நாளில் சற்று அதிகமாக ரன்களை குவிக்க உதவியது. அது (டிஆர்எஸ்) எங்கள் கைப்பக்கம் திரும்பி எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் அதன் காரணமாக போட்டியை மறந்த இந்திய வீரர்கள் அதிகப்படியான உணர்ச்சியில் வெளிப்படுத்தினார்கள், இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்” என தெரிவித்த டீன் எல்கர் டிஆர்எஸ் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் கூடுதலாக சற்று ரன்கள் அடிக்க முடிந்ததாகவும் அந்த முடிவு இந்தியாவிற்கு பாதகமாக அமைந்ததால் இந்திய வீரர்கள் போட்டியை கோட்டை விட்டதாகவும் கூறினார்.

elgar

அந்த பந்தை எதிர்கொண்ட டீன் எல்கரே இவ்வாறு கூறுவதை பார்த்தால் அது கண்டிப்பாக அவுட்டு தான் என்று நிரூபணமாகியுள்ளது. அப்படியானால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமா? என இந்திய ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளார்கள்.

- Advertisement -

மகிழ்ச்சி:
“இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த பரபரப்பான தருணத்தில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சற்று அதிகம் கைக்கொடுக்கிறது என்பதை உணர்ந்த நாங்கள் பேட்டிங்கில் சற்று அதிக அக்கறையுடன் விளையாடினோம். சொந்த மண்ணில் நடந்த இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோற்றது பின்னடைவை ஏற்படுத்தியது என்றாலும் அந்த தோல்வியில் துவளாத நாங்கள் அடுத்த 2 போட்டிகளில் மீண்டெழுந்து வெற்றி பெற்றோம், அதுதான் தென் ஆப்பிரிக்கர்களின் வழியாகும்”

இதையும் படிங்க : தவறவிட்ட கேட்ச்கள், DRS சர்ச்சை, மோசமான பேட்டிங் ! தெ.ஆ மண்ணில் இந்தியா தோற்க – 9 காரணங்கள் இதோ

என இது பற்றி மேலும் டீன் எல்கர் தெரிவித்தார். என்னதான் டிஆர்எஸ் தென்ஆப்பிரிக்காவிற்கு சாதத்தையும் இந்தியாவிற்கு பாதகத்தையும் அளித்தாலும் அந்த ஒரு பந்தை தவிர ஏனைய பந்துகளில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டது. இந்தியா வெற்றி பெரும் அளவுக்கு செயல்பட தவறியதாலேயே கோப்பையை தென்ஆப்பிரிக்கா வென்றுள்ளார்கள் என்பதே நிதர்சனம்

Advertisement