தவறவிட்ட கேட்ச்கள், DRS சர்ச்சை, மோசமான பேட்டிங் ! தெ.ஆ மண்ணில் இந்தியா தோற்க – 9 காரணங்கள் இதோ

IND
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1 – 0 என தொடரில் முன்னிலை பெற்ற போதிலும் அடுத்த 2 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து இந்தியா கோப்பையை கோட்டை விட்டது என்றே கூறலாம். இதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் வாழ்நாள் கனவு மீண்டும் சிதைந்து போய் உள்ளதால் இந்திய ரசிகர்கள் கடும் சோகத்துடன் காணப்படுகிறார்கள்.

INDvsRSA

தோல்விக்கான காரணங்கள்:
சரி தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா மண்ணை கவ்வி தோல்வி பெற்றதற்க்கான 9 முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம் வாங்க: 1. மோசமான பேட்டிங் : முதலாவதாக இந்த தொடரில் இந்தியா தோல்வி அடைவதற்கு பந்துவீச்சு துறையில் 1% கூட காரணமில்லை. ஏனெனில் பும்ரா, ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த இந்திய பவுலர்கள் முதல் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுத்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர். அதற்க்கு காரணம் அந்தப் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்து பவுலர்களுக்கு உதவியிருந்தார்.

- Advertisement -

ஆனால் கடைசி 2 போட்டிகளில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு இந்திய பேட்டர்கள் ரன்கள் அடித்து கொடுக்கவில்லை, எடுத்துக்காட்டாக 300 ரன்கள் கூட டிபன்ட் செய்ய முடியாத கேப் டவுன் மைதானத்தில் வெறும் 212 ரன்களை கபில் தேவ் வந்தால் கூட டிபன்ட் செய்ய முடியாது. எனவே இந்தியாவின் இந்த படுதோல்விக்கு இந்தியாவின் பேட்டிங் 100% பொறுப்பாகும்.

ind vs rsa

2. கவனம் தவறிய ஓப்பனிங் ஜோடி:
இந்த தொடரின் முதல் போட்டியில் கேஎல் ராகுல் – மயங் அகர்வால் ஜோடி 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கேஎல் ராகுல் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

ஆனால் அதன்பின் நடந்த எஞ்சிய 2 போட்டிகளில் இந்த ஜோடி ஒரு முறை கூட 50+ பார்ட்னர்ஷிப் ரன்களை அமைக்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலும் இந்தியா மண்ணை கவ்வ முதல் விதை ஆரம்பத்திலேயே விதைக்கப்பட்டது.

Pujara

3. காலம் கடந்த புஜாரா – ரகானே:
இந்த தொடரை இந்தியா இழப்பதற்கு மிக மிக முக்கிய காரணம் புஜாரா – ரகானே என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 2 வருடங்களாக பார்மில்லாமல் திண்டாடிய வேளையிலும் அனுபவத்தை மதித்து இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதை பயன்படுத்த தவறிய இவர்கள் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவின் தோல்வியை உறுதிப்படுத்தினார்கள்.

- Advertisement -

4. டிஆர்எஸ் சர்ச்சை:
பேட்டிங் தான் அப்படி என்று பார்த்தால் இந்த தொடரில் இந்தியாவிற்கு அதிர்ஷ்டமும் இல்லை என்றே கூறலாம். நேற்று நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் “டீன் எல்கருக்கு கொடுக்கப்பட்ட அவுட் டிஆர்எஸ் முறைப்படி நாட் அவுட் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது”.

bumrah 1

களத்தில் இருந்த அம்பயர் மற்றும் பல ஜாம்பவான் வீரர்கள் அதை அவுட் என தற்போதும் கூறுகிறார்கள். அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 60/1 என இருந்தது, அதன்பின் எல்கர் அவுட் ஆன போது அந்த அணியின் ஸ்கோர் 101/2 ஆகும். எனவே அந்த டிஆர்எஸ் சரியான வகையில் கொடுக்கப்பட்டிருந்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.

- Advertisement -

5. கோட்டை விட்ட கேட்ச்:
நேற்று நடைபெற்று முடிந்த 3 வது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் முடிவில் இந்தியாவின் தோல்வி 90% உறுதியானது. அந்த வேளையில் 4வது நாளில் “பும்ரா வீசிய பந்தில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் கொடுத்த எளிதான கேட்ச்சை புஜாரா கோட்டை விட்டார்”. ஒருவேளை அந்த கேட்சை அவர் பிடித்திருந்தால் 4வது நாளில் இந்தியா மேலும் சில விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற போராடியிருக்கும்.இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் இதேபோல 4 – 5 கேட்ச்களை ஸ்லிப் பகுதியில் இந்தியா கோட்டை விட்டது.

pant 2

6. கைவிட்ட டெயில் எண்டர்கள்:
இந்த தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியாவின் டெயில் எண்டர்கள் பெரிய அளவில் பங்காற்ற வில்லை. கடந்த 2021இல் இங்கிலாந்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷமி – பும்ரா போன்றவர்கள் கடைசி நேரத்தில் கணிசமான ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்கள். ஆனால் அவர்கள் இம்முறை ரன்கள் அடிக்க முயற்சித்தும் முடியாமல் போனதற்காக அவர்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

7. டாஸ் முடிவு: 3வது போட்டி நடந்த கேப் டவுன் மைதானத்தில் கடைசி 5 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 419 ஆகும். மேலும் இங்கு 80% போட்டிகளில் சேசிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன. அப்படிப்பட்ட வேளையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச தீர்மானிக்காமல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தோல்வியை உண்டாக்க முக்கிய காரணமாகும்.

IND

8. ரோஹித் சர்மா, ஜடேஜா:
இந்த தொடரில் நல்ல பார்மில் உள்ள தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் மிடில் ஆர்டர் வரிசையில் ஆல்-ரவுண்டராக விளையாடும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியது இந்த தொடரில் இந்தியாவிற்கு எதிர்பார்த்தது போலவே பின்னடைவை கொடுத்ததுடன் இறுதியில் தோல்வியையும் பரிசளித்து விட்டது.

9. கேப்டன் விராட் கோலி:
இந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணியில் இருந்து 2வது போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அதை கச்சிதமாக பயன்படுத்திய தென்னாபிரிக்கா 2வது போட்டியில் வெற்றி பெற்று கடைசியில் 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவை சாய்த்து விட்டது. 2வது போட்டியிலிருந்து விராட் கோலி விலகிய அந்த தருணம் ஆங்கிலத்தில் “மொமெண்ட்” எனப்படும் “இந்தியாவின் வெற்றிநடையில் முள்ளை போட்டது” போல் ஆகிவிட்டது.

Advertisement