2026 ஐ.பி.எல் கோப்பையை வென்றால் அவருக்கு டெடிகேட் பண்ணுவோம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வந்த நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் வந்துள்ளார். இந்த டிரேடிங் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக உறுதியானது.

ஐ.பி.எல் கோப்பையை வென்றால் அவருக்கு அர்பணிப்போம் : ரவீந்திர ஜடேஜா

இதன் காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். தனது ஐபிஎல் கரியரின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இடம்பெற்ற ஜடேஜா முதல் கோப்பையை அங்கு வென்றிருந்த பிறகு சிஎஸ்கே அணிக்காகவும் மூன்று முறை கோப்பையை வென்ற அணியில் இருந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தான் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றது குறித்தும், ஒருவேளை அடுத்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றினால் யாருக்கு அதை அர்ப்பணிப்பேன் என்பது குறித்தும் ரவீந்திர ஜடேஜா சில உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

உண்மையிலேயே மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. ராஜஸ்தான் ராயல்ஸ் அனியானது கடந்த சில சீசன்களாகவே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் அடுத்த ஆண்டு அந்த அணியுடன் இணைந்து விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

- Advertisement -

ஒருவேளை அடுத்த ஆண்டு நாங்கள் ஐபிஎல் தொடரை கைப்பற்றினால் நிச்சயம் அதனை ஷேன் வார்னுக்கு தான் டெடிக்கேட் செய்வோம். ஏனெனில் என்னுடைய கரியர் ஆரம்பித்தபோது என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை வழங்கியது அவர்தான். ராஜஸ்தான் அணியின் நிர்வாகமும் எனக்கு ஆதரவாக இருந்தது.
அவரது தலைமையில் தான் நாங்கள் முதல் கோப்பையை கைப்பற்றியிருந்தோம்.

இதையும் படிங்க : கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக செய்யும் தவறை விமர்சித்து சர்பராஸ் கானுக்கு ஆதரவு – தெரிவிக்கும் ரசிகர்கள்

எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நிச்சயம் முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வார்ன்க்கு தான் அதனை அர்ப்பணிப்போம் என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement