தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது ஏற்கனவே கொல்கத்தா நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.
கம்பீர் செய்யும் தவறை விமர்சிக்கும் ரசிகர்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கிய வேளையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாடி வருகிறது.
இதன் காரணமாக இந்திய அணிக்கு இந்த இரண்டாவது போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ரன்கள் மட்டுமே குவித்ததால் நிச்சயம் இந்த போட்டியிலும் இந்திய அணி தற்போதைய நிலையில் தோல்வியை நோக்கியே செல்கிறது என்று கூறலாம்.
இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பெரிய சறுக்கலுக்கு காரணமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சரியான தேர்வு இல்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. அந்த வகையில் தற்போதைய அணியிலும் துருவ் ஜுரேல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்கள் இருவருமே இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பெரியளவு ரன்களை குவிக்காததால் அவர்கள் மீது பெரியளவில் விமர்சனம் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கௌதம் கம்பீர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவருடைய இஷ்டத்திற்கு தேர்வினை நடத்தி வருகிறார் என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய ரசிகர்கள் பலரும் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து சொதப்பும் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்பராஸ் கானை கொண்டுவர வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
அதுமட்டும் இன்றி துருவ் ஜுரேலும் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கானை அணிக்குள் கொண்டு வரலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



