சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal and Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 489 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 201 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்தது.

சச்சினுக்கு அடுத்து சாதனையை நிகழ்த்திய ஜெய்ஸ்வால் :

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 97 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 58 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இவர்கள் இருவரை தவிர இந்திய அணியின் மற்ற வீரர்ர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காதது முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சரிவுக்கு காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த தகவல் வெளியாக்கி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 24 வயதை தொடுவதற்கு முன்னர் அதிகமுறை 50+ ஸ்கோரை அடித்த வீரராக முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தனது 24 வயதுக்குள்ளதாக 29 முறை 50+ ஸ்கோரை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து தற்போது ஜெய்ஸ்வால் தனது 24-வது வயதுக்கு முன்னர் இந்த போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் 20 முறை 50+ ஸ்கோர் அடித்து இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மேலும் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் இருக்கும் நிலையில் இரண்டாவது இந்திய வீரராக ஜெய்ஸ்வால் இந்த அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக 4 ஆவது இடத்தில் அவரை விளையாட வையுங்க – முகமது கைப் கருத்து

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை நிரந்த துவக்க வீரராக விளையாடும் அவர் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இனிவரும் காலங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார் என்பது உறுதி.

Advertisement