இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 30-ம் தேதி துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் வெளியான ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் அவரை விளையாட வையுங்க : முகமது கைப்
ஏனெனில் சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்ததன் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்காத அவர் ஒருநாள் தொடரிலும் விளையாட முடியாது என்று மருத்துவ அறிக்கை வெளியானதன் காரணமாக அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாகவே புதிய கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கிறார். இதன் காரணமாக எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் நான்காவது இடத்தில் யார்? அவருக்கு பதில் விளையாடப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா போன்றோர் மீண்டும் வாய்ப்பினை பெற்றுள்ளதால் இவர்களில் யாரேனும் ஒருவர் நான்காவது இடத்தில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி நான்காவது இடத்திற்கு துருவ் ஜூரேல் பொருத்தமாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் துருவ் ஜுரேல் தான் விளையாட வேண்டும். ஏனெனில் அவரிடம் ஒரு நல்ல பேட்டிங் டெக்னிக் மற்றும் விக்கெட் சீக்கிரமாக விழுந்தால் ஒருபுறம் நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறனும் இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதையும் படிங்க : 3 ஆம் இடத்தில் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட சாய் சுதர்சன் – ரசிகர்கள் விமர்சனம்
அவரிடம் அதிகளவு ஓவர்களை பிடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எபிலிட்டி இருப்பதாகவும் நான் கருதுகிறேன். எனவே அவரை ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.



