- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசியக்கோப்பை : காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடத்தப்பட்டு வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் பல பேருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் இந்த தொடர் அனைத்து வீரர்களுக்குமே ஒரு முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாகவே காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் விலகியதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமான தகவலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர ஆல்ரவுன்டரான ஜடேஜா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் இந்த ஆசிய கோப்பை தொடரினை தவற விடுகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த முழங்கால் காயம் அவருக்கு புதிது கிடையாது என்றும் கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை அவர் தவறவிடவும் இந்த முழங்கால் காயம் தான் காரணம் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்று வீரராக அக்சர் பட்டேல் அணியுடன் இணைந்துள்ளார் என்ற தகவலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உ.கோ 2022 : நீக்கினால் மொத்த அணியும் சரிந்து விடக்கூடிய 3 முக்கிய இந்திய வீரர்களின் பட்டியல்

ஏற்கனவே இந்திய அணியின் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் இருந்த வேளையில் ஜடேஜாவிற்கு சரியான மாற்றாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by