- Advertisement -
ஐ.பி.எல்

அதைப் பற்றி எதாவது தெரியுமா? விராட் கோலி பற்றி பேசுறவங்க எத்தனை சதம் அடிச்சுருக்கீங்க.. ஏபிடி கோபம்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு அணிக்காக 500 ரன்கள் அடித்து நன்றாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் மற்ற வீரர்கள் சுமாராக விளையாடியதால் 10 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் இந்த தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் நேரம் செல்ல செல்ல தன்னுடைய அரை சதம் அல்லது சதத்தை தொடுவதற்காக நிதானமாக விளையாடுவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. எனவே சொந்த சாதனைக்காக சுயநலத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலி பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக பேச்சுக்கள் காணப்படுகிறது.

- Advertisement -

ஏபிடி பதிலடி:
சொல்லப்போனால் அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரை தேர்வு செய்யக்கூடாது என்றும் சிலர் தெரிவித்தனர். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்கள் அடித்து 26000+ ரன்களை குவித்து ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ள விராட் கோலி உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசுபவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி உண்மையாக தெரியாதவர்கள் என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ட்ரைக் ரேட் சம்பந்தமாக விராட் கோலி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நீண்ட காலமாக நடந்து வரும் இது எனக்கு சோர்வை கொடுக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் விரக்தியடைகிறேன்”

- Advertisement -

“இந்தப் பையன் கிரிக்கெட்டில் விளையாடியவர்களில் ஒரு சிறந்த வீரர். அவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டுள்ளார். ஆர்சிபி அணிக்காக அவர் குறிப்பிட்ட வேலையை செய்கிறார். ஆனால் கிரிக்கெட்டைப் பற்றிய உண்மையான அறிவு தெரியாமல் புள்ளிவிவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சில வல்லுநர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சிக்கின்றனர்”

இதையும் படிங்க: காய்ச்சல் வேற.. மொத்தம் 5 பேர்.. எங்களால் பிளானை ஃபாலோ பண்ண முடியல.. சிஎஸ்கே தோல்வியால் பிளெமிங் கவலை

“விமர்சிக்கும் நீங்கள் எவ்வளவு போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்? ஐபிஎல் தொடரில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளீர்கள்? 2016இல் மிகப்பெரிய சாதனை படைத்த சீசனை விட இந்த வருடம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் இந்த விமர்சனங்கள் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை. கனவில் விளையாடுவது போல பேட்டிங் செய்யும் நீங்கள் தொடர்ந்து இப்படியே விளையாடுங்கள் என்று நான் விராட் கோலியிடம் சொல்வேன்” எனக் கூறினார்.

- Advertisement -