- Advertisement -
ஐ.பி.எல்

ஆஹா என்ன ஒரு செலக்சன்.. அதான் ஸ்பெஷலே.. ரசிகர்களின் கோபத்துக்கு மத்தியில் தேர்வுக்குழுவை புகழ்ந்த கைப்

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 20 ஓவர் உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் களமிறங்குவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு கொந்தளிக்க வைத்தது.

குறிப்பாக முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் அதிக எக்கனாமியில் சுமாராகவே சுமாராகவே பந்து வீசி வருகின்றனர். ஆனால் அவர்களை விட குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள நடராஜன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழு தரமான ரிங்கு சிங்கையும் கழற்றி விட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

புகழ்ந்த கைஃப்:
இந்நிலையில் இதை விட அற்புதமான இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக 4 ஸ்பின்னர்கள் மற்றும் இந்தியாவுடன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணியில் ஸ்பெஷலான சமநிலையை கொடுப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அஜித் அகர்கர் இதை விட சிறந்த அணியை தேர்ந்தெடுக்க முடியாது. மிகவும் வலுவான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 4 ஸ்பின்னர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது நல்ல சமநிலையை கொடுக்கிறது. மேலும் 8 பவுலர்களில் அக்சர் பட்டேல், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆல் ரவுண்டர்கள். சிவம் துபேவும் பந்து வீசுவார்”

- Advertisement -

“ஜெய்ஸ்வால் உங்களுக்கு ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி நல்ல துவக்கத்தை கொடுப்பார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நீங்கள் எப்போதும் பகல் நேரத்தில் விளையாடுவீர்கள். எனவே அங்கே பனியின் தாக்கம் இருக்காது. அதனால் பவர் பிளே ஓவர்களில் உங்களால் அட்டாக் செய்து ஆக்ரோஷமாக விளையாட முடியும். ரோஹித் சர்மாவாலும் அதே போல விளையாட முடியும்”

இதையும் படிங்க: அதைப் பற்றி எதாவது தெரியுமா? விராட் கோலி பற்றி பேசுறவங்க எத்தனை சதம் அடிச்சுருக்கீங்க.. ஏபிடி கோபம்

“அதே நேரத்தில் உங்களால் துபேவிடம் 2 – 3 ஓவர்களை கொடுக்க முடியும். அதனாலேயே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது நல்ல தேர்வாகும்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஓரிரு சுமாரான தேர்வுகள் இருந்தாலும் மற்றபடி இந்திய அணியில் தரமான நல்ல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எனவே 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -