ஐசிசி டி20 உ.கோ 2022 : நீக்கினால் மொத்த அணியும் சரிந்து விடக்கூடிய 3 முக்கிய இந்திய வீரர்களின் பட்டியல்

IND
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வரும் இந்தியா தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்வதற்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. அவரது தலைமையில் அந்த உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா வெற்றிநடை போட்டு வருகிறது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

மேலும் இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தரமான வீரர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கடந்த ஒரு வருடத்தில் நிறைய இளம் மற்றும் சீனியர் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில் அரஷ்தீப் சிங், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் போன்ற திறமையான வீரர்களை பெற்றுள்ள இந்தியா விரைவில் நடைபெறும் உலக கோப்பைக்கு 15 வீரர்களை மட்டுமே அழைத்துச் செல்ல உள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் நிச்சயமாக இருப்பார்கள் என்றாலும் தற்சமயத்தில் அது போன்ற சீனியர்கள் இந்திய அணியை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு உண்மையான பார்மில் இருக்கிறார்களா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.

3 தூண்கள்:
அந்த வகையில் டி20 உலகக் கோப்பை துவங்க இன்னும் 50 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் இந்த வீரர்களை நீக்கினால் மொத்த அணியின் சமநிலையும் நிலைகுலைந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு பேட்டிங், பவுலிங், ஆல்-ரவுண்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் தூண்களாக நிற்கும் 3 முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்:

Jasprit Bumrah

3. ஜஸ்பிரித் பும்ரா: கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழும் இவர் பந்துவீச்சு துறையின் முகமாக திகழ்கிறார் என்றே கூறலாம். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கக்கூடிய இவர் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர்.

- Advertisement -

தற்சமயத்தில் நல்ல பார்மில் உலகின் நம்பர் ஒன் பவுலராக போற்றப்படும் இவர் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடிக்கத் துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் திறமையை பெற்றுள்ளார். 2016இல் தனது கேரியரை ஆஸ்திரேலியாவில் தொடக்கிய இவர் ஏற்கனவே அங்கு சில மறக்கமுடியாத வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

Bumrah 1

எனவே தற்போது காயத்தால் ஆசிய கோப்பையில் பங்கேற்காமல் குணமடைந்து வரும் இவர் உலகக்கோப்பை இந்திய அணியின் பந்துவீச்சு துறையில் தூணாக செயல்படுவார் எனக்கூறலாம். ஏனெனில் என்னதான் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற பவுலர்கள் இருந்தாலும் இவருக்கு மாற்று பவுலர் இந்திய அணியில் கிடையாது.

- Advertisement -

2. சூரியகுமார் யாதவ்: 30 வயதில் அறிமுகமாகி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ள இவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணிகளை எந்த நேரத்திலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் களமிறங்கி முதல் பந்திலிருந்தே பிரித்து மேயும் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ள இவரை இந்திய ரசிகர்கள் இந்தியாவின் ஏபிடி என்று பாராட்டும் நிலையில் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மல் இருக்கும் இவர் ஐசிசி தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார்.

Suryakumar Yadav

மேலும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோரை விட இந்திய பேட்டிங்கில் தற்சமயத்தில் இவர்தான் நல்ல பார்மில் தூணாக நிற்கிறார். 25 போட்டிகளில் 758 ரன்களை 39.89 என்ற சராசரியிலும் 177.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளாசி அறிமுகமான ஒன்றரை வருடத்திற்குள் இதர வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றதே அதற்குச் சான்றாகும். எனவே தற்சமயத்தில் இந்திய அணியில் இவருக்கு மாற்று வீரர் யாருமே கிடையாது என்றே கூறலாம்.

- Advertisement -

1. ஹர்டிக் பாண்டியா: கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் மற்றும் மற்றும் பவுலர்களை விட அதை இரண்டையும் சேர்த்து செய்யும் ஆல்-ரவுண்டர்களுக்கு எப்போதுமே மவுசும் மதிப்பும் அதிகமாகும். அதிலும் இவரை போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அதுவும் இந்தியாவுக்கு கிடைப்பதெல்லாம் அரிதாகும். கடந்த 2016இல் அறிமுகமாகி ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு அசத்திய இவர் 2018, 2019க்குப்பின் சந்தித்த காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

Hardik Pandya

அதற்காக மனம் தளராமல் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அணியை சிறப்பாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த வருடம் பார்மில் இல்லாததால் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு இம்முறை இவர் பழைய ஃபார்முக்கு பழைய பாண்டியாவாக திரும்பியுள்ளது பெரிய பலமாகும். அதற்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் அவரின் செயல்பாடுகளே சாட்சியாகும். எனவே பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைக்கும் மையத்தில் சமநிலையை ஏற்படுத்தும் இவர் இல்லாமல் போனால் இந்திய அணி நிலை குலைந்து விடும் என்று வெளிப்படையாக கூறலாம்.

Advertisement