- Advertisement -
இந்திய கிரிக்கெட்

587 விக்கெட்ஸ்.. என்னோட குருவான அஸ்வின் என்கிட்டயும் சொல்லல.. இது அவங்களுக்கான வாய்ப்பு.. ஜடேஜா உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விடை பெற்றுள்ளார். 2010 முதல் இந்தியாவுக்காக விளையாடிய அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற உலக சாதனையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.

2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அஸ்வின் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காததால் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தம்முடைய பவுலிங் பார்ட்னரான ஓய்வு பற்றி தம்மிடமும் சொல்லவில்லை என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜடேஜா உருக்கம்:

மேலும் களத்தில் தமக்கு அஸ்வின் ஒரு குரு மற்றும் ஆலோசகராக செயல்பட்டு உதவிகளை செய்ததாகவும் ஜடேஜா உருக்கமாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பற்றி செய்தியாளர் சந்திப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாகத் தான் எனக்கும் விவரம் தெரிந்தது. அது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் நாள் முழுவதும் நாங்கள் நேரத்தை ஒன்றாக செலவிட்டோம்”

“ஆனால் ஓய்வு பற்றிய குறிப்பைக் கூட அவர் என்னிடம் சொல்லவில்லை. அவருடைய மனம் எப்படி வேலை செய்யும் என்பது நமக்குத் தெரியும். அவர் எனக்கு களத்தில் ஆலோசகரை போன்றவர். நீண்ட வருடங்களாக நாங்கள் ஒன்றாக விளையாடினோம். போட்டியின் சூழ்நிலைகளைப் பற்றியும் பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை பற்றியும் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்திகளை பரிமாறிக் கொண்டோம்”

- Advertisement -

பிரிந்த சாதனை ஜோடி:

“அந்த அனைத்தையும் இனிமேல் மிஸ் செய்வேன். இந்திய அணிக்காக அஸ்வினை விட சிறந்த ஆல் ரவுண்டர் பவுலர் கிடைப்பார் என்று நாம் நம்புவோம். இது ஒவ்வொருவருக்கும் தகுந்த மாற்று வீரர்கள் வருவார்கள். இந்தியாவில் நல்ல இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் எங்களை போன்றவர்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் நகர வேண்டும்”

இதையும் படிங்க: 2 ஏமாற்றம்.. கிரேட் அஸ்வினை இந்திய அணி வலுக்கட்டாயமா ரிட்டையராக வெச்சுட்டாங்க.. எரப்பள்ளி பிரசன்னா

“அந்த இடத்தை பிடிக்க இளம் வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (587) எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை அஸ்வின் மற்றும் ஜடேஜா படைத்துள்ளார்கள். மேலும் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கும் அஸ்வின் – ஜடேஜா கருப்பு குதிரைகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -