எல்லாரும் பழி சொல்லும் சிஎஸ்கே கேப்டன்ஷிப் ராக்கெட் சைன்ஸ் இல்ல.. நல்லா செஞ்சுருக்கனும்.. ஜடேஜா வருத்தம்

Ravindra Jadeja 5
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து முதல் அணியாக வெளியேறியது. இந்த வருடம் அந்த அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு குளறுபடியான கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

2021 ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் 4வது முறையாக சிஎஸ்கே வென்று சாதனை படைத்தது. அதற்கடுத்த வருடம் வயது காரணமாகவும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டும் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி தம்முடைய நம்பிக்கைக்குரிய ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா உள்ளூரில் கூட பெரியளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே கேப்டன்ஷிப் அனுபவம்:

அதனால் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக ஜடேஜா முதலில் தம்முடைய சொந்த வேலையான பேட்டிங், பவுலிங் துறைகளில் தடுமாறினார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணியும் மோசமாக விளையாடியது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்த 4 தோல்விகளை சந்தித்த சென்னை ஆரம்பத்திலேயே பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது.

அதற்கிடையே ரவீந்திர ஜடேஜா காயத்தை சந்தித்து வெளியேறியதால் மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். அவருடைய தலைமையிலும் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற தவறிய சென்னை 2020க்குப்பின் 2வது முறையாக லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் ஒரு கேப்டன் கேப்டன் தலைமையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினால் அணி வெற்றி பெறும் என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

- Advertisement -

ராக்கெட் சைன்ஸ் கிடையாது:

அந்த வகையில் கேப்டன்ஷிப் என்பது ராக்கெட் சைன்ஸ் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் தோல்வியை சந்தித்தால் அனைவரும் கேப்டனை குறை சொல்வார்கள் என்று கூறும் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக 2022இல் தாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் யூடியூப் சேனலில் ஜடேஜா பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: களத்தில் அடிதடி.. அம்பயரை வைத்துக்கொண்டே வங்கதேச – தெ.ஆ வீரர்கள் சண்டை.. நடந்தது என்ன?

“டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் புதிய நிகழ்வு நிகழும் என்பதால் கேப்டன்ஷிப் மிகவும் கடினமானது. டி20 என்பது வேகமான விளையாட்டு. எனக்கு அது நல்ல அனுபவமாக அமைந்தது. கேப்டனாக நான் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். ஒரு அணி நன்றாக செயல்படவில்லையெனில் அனைத்து பழிகளும் கேப்டன் மேலே விழும். பவுலிங், ஃபீல்டிங் மாற்றங்கள் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன. துரதிஷ்டவசமாக எங்களுடைய அணி நன்றாக செயல்படவில்லை. அனைவரும் பங்காற்றினால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அப்படி நடந்திருந்தால் கேப்டன்ஷிப் ராக்கெட் அறிவியலாக இருந்திருக்காது” எனக் கூறினார்.

Advertisement