களத்தில் அடிதடி.. அம்பயரை வைத்துக்கொண்டே வங்கதேச – தெ.ஆ வீரர்கள் சண்டை.. நடந்தது என்ன?

BAN vs RSA
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தாக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் நேருக்கு நேராக சண்டையிட்டுக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா வளர்ந்து வரும் அணிகள் தாக்காவில் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. அந்தப் போட்டியின் 3வது நாள் மே 28ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது தென்னாபிரிக்க வீரர் ஃட்ஷேபோ ஃந்டுலி வீசிய 105வது ஓவரின் முதல் பந்தை 10வது இடத்தில் களமிறங்கிய வங்கதேச டெயில் எண்டர் பேட்ஸ்மேன் ரிப்போன் மோண்டல் அதிரடியான சிக்ஸராக பறக்க விட்டார். அதற்காக பவுலர் அவரை பார்த்து முறைத்ததாக தெரிகிறது. அவரைப் பார்த்துக் கொண்டே வங்கதேச பேட்ஸ்மேன் ரிப்போன் எதிர்புறம் இருக்கும் சக வீரர் மெஹதி ஹெசனை நோக்கிச் சென்றார்.

- Advertisement -

களத்தில் மோசமான அடிதடி:

அவரை நோக்கி சென்ற தென்னாப்பிரிக்கா பவுலர் சண்டையிடுவது போல் வந்தார். கடைசியில் தென்னாப்பிரிக்க பவுலர் வங்கதேச பேட்ஸ்மேன் ரிப்போன் மேலே மோதி 2 கைகளால் தள்ளி விட்டார். அத்துடன் வங்கதேச பேட்ஸ்மேன் ஹெல்மெட்டை பிடித்து இழுத்த அந்த பவுலர் சில வார்த்தைகளைப் பேசிக்கொண்டே வம்பிழுத்தார். அதற்கு அந்த பவுலரை தள்ளி விட்டு ரிப்போன் பதிலடி கொடுத்தார்.

அதை கவனித்த நடுவர் சண்டையை தவிர்ப்பதற்காக இருவருக்கும் நடுவே சென்றார். ஆனால் அவரையும் தாண்டி அந்த தென்னாப்பிரிக்க பவுலர் மீண்டும் வங்கதேச பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை பிடித்து இழுத்து சில வார்த்தைகளைப் பேசி சண்டையிட்டார். அதற்கு பதிலடி கொடுத்த அந்த பேட்ஸ்மேன் தம்முடைய கையில் இருந்த பேட்டை வைத்து ஓங்கி பவுலரை அடிப்பதற்காக சென்றார்.

- Advertisement -

மோசமான சண்டை:

ஒரு வழியாக அப்போது முழுமையாக உள்ளே புகுந்த நடுவர் சண்டையை தடுத்து நிறுத்தினார். அதைத் தொடர்ந்து மற்றொரு நடுவரும் உள்ளே வந்து சண்டையை நிறுத்தினார். சக வீரர்கள் தங்களுடைய அணி வீரர்களை இழுத்துப் பிடித்து சண்டையை நிறுத்தினார்கள். அப்போதும் அந்த இருவரும் வார்த்தைகளால் ஓரிரு நிமிடங்கள் மோதிக்கொண்டார்கள். இந்த மோசமான சண்டைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பஞ்சாப் – பெங்களூரு போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கணிப்பினை வெளிப்படுத்திய – தமிழகவீரர் அஷ்வின்

எப்படி இருந்தாலும் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் அவர்கள் நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அப்போட்டி முடிந்ததும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் இறுதியில் அவர்களுக்கான தண்டனையை ஐசிசி அல்லது அந்த நாட்டு வாரியங்கள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement