இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.
இந்த அணிதான் இன்று வெற்றிபெறும் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ஒரு வாய்ப்பு இருப்பதால் எந்த அணி வெற்றி பெறும் ?எந்த அணி தோல்வியை சந்திக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்சிபி அணியில் மாயங்க் அகர்வாலின் பங்களிப்பு பற்றி பேச மறுக்கக்கூடாது. ஏனெனில் அவர் இந்த ஆண்டு சிறந்த உள்நாட்டு சீசனை வைத்திருந்தார். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் பேசினேன். ஆனால் பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தற்போது அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயரின் சீசனாக இல்லாமல் போனால் ஆர்.சி.பி அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணி வலிமையான அணியாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி தான் முதல் அணியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.
இதையும் படிங்க : இந்த 2 மாற்றத்தை செய்ஞ்சா கப் ஆர்.சி.பி அணிக்கு தான்.. அதில் மாற்றமே இல்ல – ஹர்பஜன் சிங் கருத்து
இருந்த போதிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மிக பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது குவாலிபயர் போட்டியானது மே 29-ஆம் தேதியான இன்று முல்லன்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



