- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா – என்ன தெரியுமா?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏகப்பட்ட சாதனைகள் நிகழ இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்கத்துள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் ஒரு சாதனையை நிகழ்த்தவுள்ள விவரம் குறித்த தகவல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா படைக்கவிருக்கும் சாதனை :

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்கு மிகவும் முக்கியம் என்பதனால் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரில் இடம் பிடித்திருக்கும் ரவீந்திர ஜடேஜா நேரடியாக பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவரை இந்திய அணிக்காக 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 294 விக்கெட்டுகளையும், 3036 ரன்களையும் குவித்துள்ளார்,

பந்துவீச்சு மட்டும் இன்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கும் அவரது இடம் இந்திய அணிக்கு முக்கியமானது என்பதனால் தவிர்க்க முடியாத வீரராக தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதனில் :

- Advertisement -

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த தொடரில் வெறும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதோடு ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பாக 300 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய நான்காவது சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் எட்டிப் பிடிப்பார்.

இதையும் படிங்க : திறமை என்னன்னு தெரியும்.. இனிமேல் கேஎல் ராகுல் கைல தான் எல்லாம் இருக்கு.. கேப்டன் ரோஹித் பேட்டி

அது தவிர்த்து இந்திய அணி சார்பாக இந்த மைல்கல்லை எட்டும் எட்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் ரவீந்திர ஜடேஜா படைக்க இருக்கிறார். இதுவரை இந்தியாவில் மட்டும் ஜடேஜா 44 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 213 விக்கெட்டுகளையும், 1824 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -