டி20 உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாடமாட்டார். பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு – காரணம் என்ன?

Jadeja
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் மிகச் சிறப்பான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் (செப்டம்பர் 4) இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரினை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடி வந்த இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து வெளியேறியதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெளியானது. அதன்படி ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் போதும் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்த ஜடேஜா வலது காலில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

மேலும் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக மாற்றுவீரராக ஸ்டான்ட் பை வீரராக இருந்த அக்சர் பட்டேல் அணியில் இணைவதாகவும் பிசிசிஐ அதிகாரவபூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரையும் தவறவிடுகிறார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Ravindra Jadeja

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதை உறுதியாக கூற இயலாது.

- Advertisement -

குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நான்கு மாதங்கள் வரை ஜடேஜாவால் கிரிக்கெட் விளையாட முடியாது. அவர் சிகிச்சை முடிந்து முழுவதும் குணம் அடைந்த பிறகு தான் அணிக்கு திரும்புவார். இதன் காரணமாக எதிர்வரும் உலக கோப்பை தொடரை தவறவிடும் ஜடேஜா பின்னர் அடுத்த ஆண்டு தான் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : AUS vs ZIM : அன்று ஷூ இல்லாமல் தவித்த வீரர் – இன்று ஜிம்பாப்வேயின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டு படைத்த சாதனைகளின் பட்டியல்

அவரது வலது காலை தரையில் வேகமாக வைப்பதும் அவரது முழங்கால் காயத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

Advertisement