
எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது நடைபெறயிருப்பதால் பல்வேறு அணிகளிலும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் முறையிலும் வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதன் வாயிலாகவும் சில சுவாரசியமான மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள டிரேடிங்காக சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது டிரேடிங் அமைந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெளியேறயுள்ள சஞ்சு சாம்சனை மினி ஏலத்திற்கு முன்னதாகவே சென்னை அணி தங்களது அணிக்கு டிரேடிங் செய்ய உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளன.
அப்படி சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வரும் பட்சத்தில் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அந்த அணி 2022 ஆம் ஆண்டு ஒருமுறை ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியிருந்தது. இவ்வேளையில் சஞ்சு சாம்சன் வெளியேறும் பட்சத்தில் அடுத்த ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 3 இளம் வீரர்கள் போட்டியில் இருப்பதாக கூறப்பட்டது.
அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இவ்வேளையில் அவர்கள் மூவரையும் தாண்டி தற்போது கேப்டன் தேர்வுக்கான ஒரு முக்கிய முடிவை அந்த அணியின் நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளை ஏற்று முக்கிய முடிவை கையிலெடுத்த ரோஹித் சர்மா – விவரம் இதோ
அந்த வகையில் சிஎஸ்கே அணியிலிருந்து டிரேடிங் செய்யப்படவுள்ள அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் அணியின் கேப்டனாக மாறயிருப்பது குறிப்பிடத்தக்கது.