இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹீரோ – அந்த வீரர் யார் தெரியுமா ?

CSK
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பினிஷர் ரோலில் விளையாடியிருந்த ரவீந்திர ஜடேஜா, பேட்டிங்கில் அதிரடியாக ஆடி அந்த இடத்தை நிரப்பினார். அது மட்டுமால்லாமல் தனக்கு பந்து வீச எப்போதெல்லாம் வாய்ப்பு வழங்கப்படதோ அப்போதெல்லாம் சிக்கனமாக பந்து வீசியதோடு மட்டுமல்லாம் எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி, தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ரவீத்திர ஜடேஜாவின் சமீபத்திய ஃபார்மை பார்க்கும்போது, அவர் கண்டிப்பாக வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம்பிடிப்பார் என்றே தெரிகிறது.

- Advertisement -

2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏழு போட்டிகளில் ஜடேஜா விளையாடியிருக்கிறார். இதில் 6 போட்டிகளில் பேட்டிங்கில் களமிறங்கிய ஜடேஜா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தனது விக்கெட்டைப் பறிகொடுத்து 131 ரன்கள் அடித்திருக்கிறார். இத்தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 161.72 ஆக இருக்கிறது.

மேலும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய ரவீந்திர ஜடேஜா, இந்த தொடரில் சென்னை அணிக்கு ஆறாவது பௌலராக செயல் பட்டு 6 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவருடைய எகானமி ரேட் 6.70 என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஆஸ்திரேலிய தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்ட ஜடேஜா இந்த ஐ.பி.எல் தொடரில் எவ்வாறு செயல்படப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் பேட்டிங்கில் தனது அதிரடி காண்பித்த அவர் அதுமட்டுமின்றி பவுலிங்கில் அசத்தினார். அதோடு தனது துடிப்பான பீல்டிங்கின் மூலம் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.

மூன்று விதமான துறைகளிலும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா இந்த தொடர் முழுவதும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவரின் இந்த செயல்பாட்டை பாராட்டிய ரசிகர்கள் நிச்சயம் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடிப்பது மட்டுமின்றி அந்த தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கான முக்கிய வீரராக திகழ்வார் என்று புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement