- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிட்ச் கஷ்டமானாலும்.. 5வது நாளில் இதை செஞ்சாலே இந்தியாவுக்கு வெற்றி மாதிரி தான்.. ஜடேஜா பேட்டி

இந்திய அணி கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தோற்றது. அதனால் 2வது போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி குறைந்தபட்சம் தொடரை சமன் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்தப் போட்டியிலும் தற்போது இந்தியா தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து பின்னர் இந்தியாவை 201 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அடுத்ததாக 288 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 260/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இறுதியில் 549 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 29/2 என திண்டாடி வருகிறது.

- Advertisement -

ட்ரா செய்தாலே:

அதனால் இந்தியா வெற்றி பெறுவது கிட்டத்தட்ட அசாத்தியம் என்று சொல்லலாம். ஒருவேளை போராடி போட்டியை டிரா செய்தால் கூட 1 – 0 (2) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வெல்லும். அதனால் இத்தொடரில் இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதியாகியுள்ளது ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் 5வது நாளில் போராடி இந்திய அணி போட்டியை டிரா செய்யும் என்று ரவீந்திர ஜடேஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால் குறைந்தபட்சம் ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய மோசமான சூழ்நிலையில் அதுவே இந்திய அணிக்கு வெற்றி மாதிரி இருக்கும் என்று தெரிவிக்கும் ஜடேஜா இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் பவுலிங் செய்த போது பந்து கொஞ்சம் சுழலத் துவங்கியது. தென்னாப்பிரிக்கா மிகவும் நல்ல சூழ்நிலையில் இருக்கிறார்கள்”

- Advertisement -

வெற்றி மாதிரி தான்:

“முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய முன்னிலை பெற்ற அவர்கள் பந்து சுழல்கிறது என்பது பற்றிய கவலையும் பதற்றமும் இல்லாமல் விளையாடினார்கள். ஆனால் 5வது நாளில் எதிர்பார்ப்பதை விட பந்து இன்னும் அதிகமாக சுழன்று பவுன்ஸ் ஆகி வரும். எனவே நாங்கள் ஒவ்வொரு செஷனாக விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் 4 ஆவது அதிவேக இந்திய வீரராக ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

“ஒருவேளை நாளை முதல் செஷனில் நாங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் நல்ல துவக்கத்தைப் பெற்றால், பின்னர் எங்களை அவுட்டாக்க வேண்டுமென்ற அழுத்தத்திற்குள் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் தள்ளப்படுவார்கள். அதுவே வெற்றி பெற்றதைப் போன்ற சூழ்நிலையை கொடுக்கும். ஒருவேளை நாளை முழுவதும் விளையாடினால் அதுவே எங்களுக்கு வெற்றியைப் போன்ற நல்ல விஷயமாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -