கடைசி 50 வருஷத்துல கும்ப்ளேவுக்கு அடுத்து இந்த சாதனையை செய்யும் 2 ஆவது வீரர். ஜடேஜா தானாம் – வரலாற்று சாதனை

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு நாட்கள் போட்டி முடிவடைந்த வேளையில் இன்று மூன்றாம் நாள் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி முழுக்க முழுக்க தற்போதே உறுதியாகி உள்ளது என்று கூறலாம்.

Khawaja

- Advertisement -

ஏனெனில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை 113 ரன்களுக்கு முடித்துக் கொண்டது.

இதன் காரணமாக 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி இலக்கை நெருங்கிவிட்டது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக ரவீந்திர ஜடேஜா இருந்தார் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 12.1 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 42 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Jadeja

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பந்துவீச்சாகவும் இது அமைந்தது. அதுமட்டும் இன்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனையையும் அவர் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார். அதன்படி இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா வீழ்த்திய 7 விக்கெட்களில் ஐந்து விக்கெட்டுகளை அவர் கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தியுள்ளார். இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் இரண்டாவது இந்திய ஸ்பின்னராக இவர் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் கும்ப்ளே மட்டும்தான் ஸ்பின்னராக இந்த சாதனையை செய்திருந்தார். கடந்த 1992-ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோகனஸ்பர்கில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஜடேஜா இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 வீரர்களை கிளீன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சொதப்பியும் ஜாம்பவான்களாக உருவெடுத்த 5 இந்திய வீரர்கள்

அதோடு வேகப்பந்து வீச்சாளர்களின் வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கடந்த 2002-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement