தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சொதப்பியும் ஜாம்பவான்களாக உருவெடுத்த 5 இந்திய வீரர்கள்

kohli sad
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளூர் போட்டிகளில் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு பின் தேர்வாகும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கனவு தொப்பியை பெற்று விளையாடி அந்த கனவை நிஜமாக்குவதே மிகப்பெரிய சவாலாகும். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கூட எளிதாக அறிமுகமாகி விடலாம் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவது மிகவும் சவாலான ஒன்றாகும். ஏனெனில் பொறுமை, தரம், திறமை ஆகியவற்றை சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடு வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. இருப்பினும் அதில் விளையாட போராடி வரும் அனைத்து வீரர்களும் எப்படியாவது அறிமுக போட்டியிலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தேர்வுக்குழு மற்றும் கேப்டனை கவர வேண்டும் என்றே நினைப்பார்கள்.

ஏனெனில் அப்போது தான் மேற்கொண்டு வாய்ப்பை பெற முடியும் என்ற நிலைமை இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர்கள் அனைவராலும் சர்வதேச அரங்கில் விளையாடும் போது காத்திருக்கும் அதிகப்படியான அழுத்தத்தை சமாளித்து ஜொலிக்க முடிவதில்லை. இருப்பினும் அறிமுகப் போட்டியில் சொதப்பலாக செயல்பட்ட நிறைய வீரர்கள் நாளடைவில் தங்களது மிகச் சிறந்த திறமையால் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஹர்பஜன் சிங்: கடந்த 1998ஆம் ஆண்டு பெங்களூருவில் அறிமுகமான இவர் 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 112 ரன்களை வாரி வழங்கினார். 2வது இன்னிங்ஸில் அதை விட மோசமாக செயல்பட்ட அவர் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்க ஒரு காரணமாக அமைந்தார்.

அதனால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் 2001இல் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்து 32 விக்கெட்டுகளை சாய்த்து 2 – 1 (3) என்ற கணக்கில் மறக்க முடியாத சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 4வது இந்திய வீரராக சாதனை படைத்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

4. திலிப் வெங்சர்கார்: கடந்த 1976இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்து நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 7, 4 என 2 இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சுமாராகவே செயல்பட்டார்.

அதனால் தொடர் வாய்ப்பு பெறாத அவர் ஒரு வழியாக 1978இல் முதல் சதத்தை அடித்து நாளைடைவில் சச்சின், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களால் முடியாத லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 தொடர்ச்சியான சதங்களை அடித்து அசத்தினார். அப்படி மொத்தம் 112 போட்டிகளில் 6868 ரன்களை குவித்த அவர் இன்று மிகச் சிறந்த வீரராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

3. கபில் தேவ்: கடந்த 1978இல் பைசலாபாத் நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 1979இல் பர்மிங்கம் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட் ஹால் எடுத்து நாளடைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகளையும் எடுத்த ஒரே ஜாம்பவானாக ஓய்வு பெற்றதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

2. விராட் கோலி: கிங்ஸ்டன் மைதானத்தில் கடந்த 2011இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான இவர் 4, 15 என 2 இன்னிங்சிலும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து சென்றார். அதே போல ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்ட அவரை நீக்குமாறு நிறைய விமர்சனங்கள் எழுந்த போதிலும் கேப்டன் தோனியின் தொடர்ச்சியான ஆதரவு பெற்ற அவர் 2012இல் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றினார்.

அப்போதிலிருந்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளையாடி வரும் அவர் இதுவரை 105 போட்டிகளில் 8131* ரன்களை குவித்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருவதை உலகமே கொண்டாடி வருகிறது.

1. சச்சின் டெண்டுல்கர்: 16 வயது பிஞ்சு கால்களுடன் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற முரட்டுத்தன வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக 1989இல் அறிமுகமான இவர் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்தாலும் 2வது இன்னிங்சில் 59 ரன்கள் குவித்து டிரா செய்ய உதவினார்.

இதையும் படிங்க:IND vs AUS : 61/1 ல இருந்து 113/10 ஆஸ்திரேலிய அணியின் இந்த சரிவிற்கு பின்னால் – நடந்தது என்ன?

அதை தொடர்ந்து நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வருடமே மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அவர் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து பேட்டிங் துறையில் கிட்டத்தட்ட அனைத்து சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement