IND vs AUS : 61/1 ல இருந்து 113/10 ஆஸ்திரேலிய அணியின் இந்த சரிவிற்கு பின்னால் – நடந்தது என்ன?

Khawaja
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த வேளையில் தற்போது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Ashwin

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களையும், இந்திய அணி 262 ரன்களையும் குவித்திருந்தது. இதன் காரணமாக ஒரு ரன் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 62 ரன்கள் முன்னிலையுடன் நல்ல இடத்தில் இருந்தது.

- Advertisement -

ஆனால் இன்று போட்டி துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. குறிப்பாக 84 ரன்கள் வரை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியானது அதற்கு அடுத்து 29 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியிடம் சரணடைந்தது. இப்படி மிகச் சிறப்பான கட்டத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி இப்படி ஒரு பெரிய சரிவினை சந்திக்க முக்கிய காரணம் யாதெனில் :

Ashwin and Jadeja

இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததாலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்ததன் காரணமாகவும் கேப்டன் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர்களை நிறுத்திவிட்டு முற்றிலும் சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச செய்தார்.

- Advertisement -

அப்படி தொடர்ச்சியாக பந்துவீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை முற்றிலுமாக வீழ்த்திவிட்டனர். குறிப்பாக இந்த போட்டியில் 16 ஓவர்களை வீசிய அஸ்வின் 59 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Jadeja

அதே வேளையில் மற்றொருபுறம் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை இன்று பதிவு செய்த ஜடேஜா 12.1 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை முற்றிலுமாக முடக்கினார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா அணி இப்படி ஒரு பெரிய சரிவினை சந்தித்துள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக தற்போது 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை இழந்து 14 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 101 ரன்கள் தேவைப்படும் வேளையில் கைவசம் 9 விக்கெட்கள் எஞ்சியுள்ளதால் தற்போதே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைத்தது மட்டுமின்றி சாதனையையும் நிகழ்த்தி – ரவீந்திர ஜடேஜா அசத்தல்

மேலும் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்து தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெறுவதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement