IND vs AUS : ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைத்தது மட்டுமின்றி சாதனையையும் நிகழ்த்தி – ரவீந்திர ஜடேஜா அசத்தல்

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 263 ரன்களை குவிக்க அதற்கடுத்து விளையாடிய இந்திய அணி அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை 262 ரன்களை குவித்தது.

Jadeja

- Advertisement -

பின்னர் ஒரு ரன் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் குவித்திருந்தது.

இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Jadeja 1

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸின் போது மொத்தமாக 12.1 ஓவரை வீசி அதில் ஒரு மெய்டன் உட்பட 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மிகச் சிறப்பான பந்துவீச்சாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 15 வருடத்துக்கு பின் நியூசி மண்ணில் தெறிக்க விட்ட இங்கிலாந்து – ஸ்டீவ் வாக், விராட் கோலிக்கே சவால் விடும் பென் ஸ்டோக்ஸ்

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த வேளையில் தற்போது இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தற்போதே உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement