CSK : முடிவுக்கு வந்த ஜடேஜாவின் கதை. அணியில் இருந்து வெளியேற எடுத்துள்ள முடிவு – வெளியான உறுதி தகவல்

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது முடிவடைந்து மூன்று மாதங்கள் கடந்த பிறகும் இன்றளவும் சிஎஸ்கே அணியில் உள்ள சர்ச்சைகள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஏனெனில் கடந்த சீசனின் போது துவக்கத்தில் ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக ஜடேஜா மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்கினார். அதன்பிறகு பார்ம் அவுட் காரணமாக சில போட்டிகளில் ஜடேஜா வெளியேவும் அமர வைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இறுதியில் காயத்தை காரணமாக காட்டி ஜடேஜா வேண்டுமென்றே சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

Jadeja

- Advertisement -

அதோடு தொடர்ச்சியாக அவர் சொதப்பியதன் காரணமாகவே அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. அப்படி ஜடேஜாவின் கேப்டன்சி நீக்கத்தால் தான் அவருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இப்படி தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதன் காரணமாக அவருக்கும் சென்னை அணியின் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் முற்றியதாகவும் கூறப்பட்டது.

அதனை உறுதி செய்யும் விதமாக ஜடேஜா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து சென்னை அணியை பின் தொடர்வதை நிறுத்தினார். அதோடு சென்னை அணியுடன் பயணித்த புகைப்படங்களையும், பதிவுகளையும் அவர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அகற்றினார். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே-வில் இன்னும் பத்து ஆண்டுகள் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று அவர் போட்டிருந்த பதிவையும் நீக்கினார்.

Jadeja

இப்படி அடுத்தடுத்து சென்னை அணியின் உறவுகளை முறித்து வந்த ஜடேஜா தற்போது சென்னை அணியுடன் இருக்கும் பிணைப்பை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஜடேஜா டிரேடிங் விண்டோ மூலம் வெளியேறுகிறார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. அதாவது தன்னை மற்ற அணிகள் எடுக்க விரும்பினால் அதற்கு சம்மதம் என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு வீரர் நேரடியாக டிரேடிங் விண்டோவில் தன்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் விலகுகிறேன் என்று அறிவிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அணி நிர்வாகத்திடம் பேசி அணி நிர்வாகம் தான் அவரை விடுவிக்க வேண்டும்.

இதையும் படிங்க : புதுப்பொலிவுடன் தயாராகியுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவது எப்போது? – வெளியான அறிவிப்பு

அந்த வகையில் ஜடேஜாவும் சென்னை அணியிலிருந்து வெளியேற அந்த அணியின் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் சென்னை அணியுடன் அவரது பயணம் இந்த ஆண்டு முடிவடைந்து அடுத்த ஆண்டு வேறு அணிக்கு ஜடேஜா மாற உள்ளது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement