புதுப்பொலிவுடன் தயாராகியுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவது எப்போது? – வெளியான அறிவிப்பு

Chepauk
- Advertisement -

இந்தியா முழுவதும் பல்வேறு கிரிக்கெட் ஸ்டேடியங்கள் இருக்கும் வேளையில் பழைமை வாய்ந்த ஸ்டேடியங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது நம் சென்னை சேப்பாக்கம் மைதானம். இந்திய மண்ணில் உள்ள மிக முக்கிய மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதோடு இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திர வீரர்களின் சிறப்பான ஆட்டம் சென்னை மைதானத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

Chepauk

- Advertisement -

அப்படி மிகச் சிறப்பு வாய்ந்த இந்த சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச போட்டிகளும் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்த சேப்பாக்கம் மைதானத்தில் பெவிலியன் உட்பட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தின் சீரமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துள்ளதால் மீண்டும் பழையபடி சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

INDvsNZ

மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் தற்போது புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்போது சர்வதேச போட்டிகள் நடைபெறும் என்பதை குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி வரும் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஒரு போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோன்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியா அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங் போன்றே 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்கவேண்டும். அதுவே எனது ஆசை – ஜிம்பாப்வே வீரர் விருப்பம்

அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement