CSK : சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு தோனி தான் காரணமாம் – என்ன நடந்தது?

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-ஆவது ஐபிஎல் தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டனான தோனி கேப்டன் பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா பதவியேற்றார். ஜடேஜாவின் தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியானது துவக்கம் முதலிலேயே பெரிய சரிவை சந்தித்தது. அதிலும் குறிப்பாக ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது.

Jadeja

- Advertisement -

இதனால் அதிகப்படியான தோல்விகளின் காரணமாக அழுத்தத்தினால் ஜடேஜாவின் பேட்டிங் பௌலிங் என இரண்டுமே சொதப்பியது. மேலும் எப்போதுமே பீல்டிங்கில் கில்லாடியாக இருக்கும் ஜடேஜா பீல்டிங்கிலும் சொதப்ப ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் மீது அதிகப்படியான அழுத்தம் இருந்தது. அதனால் மீண்டும் ஜடேஜா தோனியிடமே கேப்டன்சியை ஒப்படைத்தார்.

இப்படி ஜடேஜா கேப்டன்சியை தோனியிடம் ஒப்படைத்ததன் பிறகு ஜடேஜா வேண்டுமென்றே கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாக அவருக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. அதனை உறுதி செய்யும் விதமாக ஜடேஜாவும் தனது சமூகவலைதள பக்கத்தில் சிஎஸ்கே அணியை தொடர்வதை நிறுத்தினார். அதோடு தற்போது டிரேடிங் விண்டோ மூலம் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறவும் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

jadeja 1

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அதற்கு காரணம் யாதெனில் ஜடேஜா கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்ததால் அவர் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக ஜடேஜாவின் நிலையை யோசித்த தோனி இப்படியே அவர் கேப்டன்சியில் தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்தால் நிச்சயம் அது அவர் இந்திய அணியில் விளையாடும் போது அவரது ஆட்டத்தில் வெளிப்படும். எனவே இந்திய டி20 அணியில் அவரது இடத்தினை இழக்கவும் நேரிடும் என்பதனால் முன்னெச்சரிக்கையாக ஜடேஜாவின் மனநிலையை சமன்படுத்தவே தோனி நிர்வாகத்திடம் பேசி ஜடேஜாவின் கேப்டன்சியை பறித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி ரசிகர்களுக்கு இன்று நேர்ந்த சோகம், சீண்டிய இங்கிலாந்தை வெளுக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

என்னதான் ஜடேஜாவின் கேப்டன் பதவி நீக்கத்திற்கு தோனி காரணமாக இருந்தாலும் இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்தை அவர் இழக்கக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தினாலேயே ஜடேஜாவின் கேப்டன் பதவியை தோனி ஏற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் தான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் வருத்தம் அடைந்த ஜடேஜா அணி நிர்வாகத்துடன் மனக்கசப்பு ஏற்பட்டது மட்டுமின்றி தற்போது அணியிலிருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement