IND vs WI : பால் டர்ன் ஆகுது, மழை இல்லைனா அவர் ஒருத்தரே வெ.இ அணியை சுருட்டிருவாரு – சீனியர் மீது சிராஜ் நம்பிக்கை

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் அங்கமாக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து 121 ரன்கள் எடுத்ததைப் போல ரோகித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ஜடேஜா 61, அஸ்வின் 56 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

Rohit-and-Jaiswal

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச், ஜோமேல் வேரிக்கன் தல 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 208/4 என்ற நல்ல நிலைமையில் இருந்தாலும் பின்னர் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 255 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்களும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

சிராஜ் நம்பிக்கை:
அதை தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மழையை கருத்தில் கொண்டு விரைவாக டிக்ளர் செய்வதற்காக அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்கள் (12.2 ஓவர்களில்) குவித்த அணி என்ற உலக சாதனை படைத்து 181/2 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 (44), ஜெய்ஸ்வால் 38 (30), இஷான் கிசான் 52* (34) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

Ashwin-1

இறுதியில் 365 ரன்களை துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் 28 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டாக அடுத்து வந்த மெக்கன்ஷியும் அவரிடமே டக் அவுட்டானார். அதனால் 4வது நாள் முடிவில் 76/2 ரன்கள் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு களத்தில் தக்நரேன் சந்தர்பால் 24* ப்ளாக்வுட் 20* ரன்களுடன் உள்ள நிலையில் இன்று நடைபெறும் கடைசி நாளில் இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்கு இப்போட்டியில் வெல்லாவிட்டாலும் எப்படியாவது டிரா செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட காத்திருக்கும் அந்த அணிக்கு மழையும் சாதகமாக இருக்கிறது. ஆம் ஜூலை 24ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சராசரியாக 40% மழை பெய்யும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது.

IND-vs-WI

ஆனாலும் பிட்ச் சுழலுக்கு அதிகமாக கை கொடுப்பதால் கடந்த போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்களை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று நம்புவதாக முகமது சிராஜ் கூறியுள்ளார். மேலும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் தன்னுடைய சிறந்த பந்து வீச்சை பதிவு செய்து போட்டி நடைபெறும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 5 விக்கெட் ஹால் எடுத்த 2வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை பெற்றது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பிட்ச் தற்போது சுழலும் விதத்தை பார்க்கும் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்துவார் என்று கருதுகிறேன். மேலும் என்னுடைய செயல்பாடுகளையும் நான் உயர்வாக மதிப்பிடுகிறேன். ஏனெனில் இது போன்ற பிளாட்டான பிட்ச்சில் 5 விக்கெட்டுகளை எடுப்பது எளிதானதல்ல”

siraj

இதையும் படிங்க:ஷிகர் தவான் இருப்பாரு, தன்னுடைய 2023 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட வாசிம் ஜாஃபர் – லிஸ்ட் இதோ

“அதற்காக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு கை கொடுக்க துவங்கிய போது நல்ல லைன், லென்த் போன்றவற்றை கச்சிதமாக வீசி என்னுடைய திட்டத்தை நான் சரியாக பின்பற்றினேன். அதிலும் பிட்ச் வேகத்துக்கு பெரிய அளவில் சாதகமில்லாத நிலைமையில் ஸ்டம்ப் லைனில் சற்று வேகமாக வீசுவதே என்னுடைய திட்டமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement