ஷிகர் தவான் இருப்பாரு, தன்னுடைய 2023 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட வாசிம் ஜாஃபர் – லிஸ்ட் இதோ

Jaffer
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. சமீபத்திய ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்திப்பதற்கு சுமாரான பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுடன் சரியான அணியை தேர்ந்தெடுக்காத இந்திய நிர்வாகத்தின் தவறு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் இம்முறை ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் காயமடைந்துள்ளதால் முன்கூட்டியே சரியான அணியை தீர்மானிப்பதில் குழப்பமும் நிலவி வருகிறது.

INDia

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைக்கான தன்னுடைய உத்தேச இந்திய கிரிக்கெட் அணியை முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாஷிம் ஜாஃபர் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதற்கு தங்க பேட் விருது வென்று முக்கிய பங்காற்றி எப்போதுமே பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிகர் தவான் பேக்-அப் தொடக்க வீரராக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதன்மை தொடக்க வீரர்களாக தேர்ந்தெடுப்பதாக கூறியுள்ளார்.

வாசிம் ஜாஃபர் அணி:
மேலும் ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள அவர் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இரு துறைகளிலும் பங்காற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் சஞ்சு சாம்சனை பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ள அவர் கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் முதன்மை விக்கெட் கீப்பராகவும் பும்ராவையும் தேர்வு செய்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Virat Kohli Shikhar Dhawan

“ரோகித் சர்மா, சுப்மன் கில், ஷிகர் தவான் ஆகியோர் என்னுடைய 3 தொடக்க வீரர்கள். குறிப்பாக தவான் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றாலும் அவரை நான் பேக்-அப் தொடக்க வீரராக தேர்ந்தெடுப்பேன். மிகவும் அனுபவமிக்க அவர் விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களைத் தொடர்ந்து 3, 4, 5 ஆகிய இடங்களில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பார்கள். மேலும் என்னுடைய 11 பேர் அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஸ்பின்னர்களாக இருப்பார்கள்”

- Advertisement -

“அத்துடன் என்னுடைய அணியில் பும்ராவுடன் முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி இருப்பார்கள். குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். என்னை பொறுத்த வரை இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது முக்கியமாகும். ஒருவேளை அவர் 10 ஓவர்கள் முழுமையாக வீசா விட்டாலும் 7 – 8 ஓவர்கள் வீசினாலே எனக்கு போதுமானது. எனவே அவர் பந்து வீசினால் நிச்சயமாக நான் 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுப்பேன்”

Wasim-Jaffer

“அதிலும் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் என்னுடைய ஆல் ரவுண்டர்களாக இருப்பார்கள். என்னுடைய 3வது ஸ்பின்னராக குல்தீப் யாதவாக இருப்பார். என்னுடைய 4வது வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூர். மேலும் ஏற்கனவே ஷிகர் தவானை 3வது தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளதால் சஞ்சு சாம்சானை நான் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார். அதாவது இந்தியாவில் பெரும்பாலான மைதானங்கள் சுழல் மற்றும் மித வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதில் அசத்துவதற்கு 2 ஸ்பின்னர்கள் 2 வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் 2 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர் தேர்வு செய்துள்ள அணி பின்வருமாறு.

இதையும் படிங்க:IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்து இஷான் கிஷன் அசத்தல் – விவரம் இதோ

ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாகூர், சஞ்சு சாம்சன்

Advertisement