IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்து இஷான் கிஷன் அசத்தல் – விவரம் இதோ

Ishan-Kishan-and-Dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் கே.எஸ் பரத்தின் மோசமான பார்ம் காரணமாக இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி அவர் அறிமுகமான அந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய அளவில் ரன்களை குவித்ததால் அவரால் அந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

Ishan Kishan 1

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அந்த போட்டியில் அவருக்கு மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியது. எனவே இந்திய அணி அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியாக இன்னிங்க்ஸை துவக்கி வைத்தனர். அதன்பின்னர் கோலிக்கு முன்னதாக 4-ஆவது வீரராக இஷான் கிஷன் களமிறங்கினார்.

Ishan-Kishan-2

இப்படி முன்கூட்டியே களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாட வேண்டிய சூழல் இருந்ததால் களமிறங்கியதிலிருந்தே அதிரடி காட்டி 34 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடி வரும் இஷான் கிஷன் முதலாவது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

அதோடு முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் சாதனை ஒன்றினையும் முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற பட்டியலில் தோனி 2 ஆம் இடத்தில் இருந்து வந்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 34 பந்துகளில் அரைசதம் தோனி 2-ஆம் இடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : என்னோட முதல் அரை சதமடிக்க அவோரோட சுயநலமற்ற முடிவு தான் காரணம் – தோனியின் சாதனையை உடைத்த இஷான் கிசான் பேட்டி

இந்நிலையில் நேற்று 33-பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன் தோனியின் சாதனையை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முதலாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆறாவது வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement