- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆர்டிஎம் விதிமுறை இருக்கட்டும்.. ஆனா அவங்களோட சம்மதம் கேட்டுட்டு பண்ணுங்க.. அஸ்வின் கோரிக்கை

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இம்முறை மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனால் தக்க வைக்கும் வீரர்களின் அளவை நான்கிலிருந்து 6 – 8 வரை அதிகரிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பிசிசிஐயிடம் பெரும்பாலான அணிகள் கோரிக்கை வைத்தன.

அதே போல ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி 3க்கும் மேற்பட்ட வீரர்களை வாங்குவதற்கான அனுமதி கொடுக்குமாறு ஹைதராபாத் போன்ற சில அணிகள் கோரிக்கை வைத்தன. இருப்பினும் ஆர்டிஎம் தான் இருப்பதிலேயே வீரர்களுக்கு கொடுமையான விதிமுறை என்று சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருந்தார். ஏனெனில் அந்த விதிமுறையால் வீரர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பது தடுக்கப்படுவதாகவும் அஸ்வின் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆர்டிஎம் விதிமுறை:

ஆர்டிஎம் விதிமுறையால் தங்களது அணிக்காக ஏற்கனவே விளையாடிய வீரரை மீண்டும் அதே அணி நிர்வாகம் ஏலத்தில் மற்ற அணிகள் கேட்கும் போது உச்சபட்ச தொகைக்கு வாங்க முடியும். எடுத்துக்காட்டாக 2025 ஐபிஎல் ஏலத்தில் மிட்சேல் ஸ்டார்க்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 15 கோடிக்கு கேட்பதாக வைத்துக் கொள்வோம்.

அப்போது 2024 சீசனில் தங்களுக்காக விளையாடிய ஸ்டார்க்கை கொல்கத்தா அணி நிர்வாகத்தால் ரைட் டூ மேட்ச் எனப்படும் ஆர்டிஎம் காரட் விதிமுறையை பயன்படுத்தி மேற்கொண்டு ஏலம் கேட்காமலேயே அதே 15 கோடிக்கு வாங்க முடியும். இருப்பினும் சில நேரங்களில் இந்த விதிமுறையை பயன்படுத்தி பல அணிகள் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரரை அதை விட குறைந்த விலைக்கு வாங்குகின்றன.

- Advertisement -

வீரர்களிடம் கேளுங்க:

எனவே அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் விரும்பினால் மட்டுமே ஒரு அணி நிர்வாகத்தால் ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி வாங்க முடியும் என்று மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக தங்களுடைய டாப் 4 – 5 வீரர்களில் ஒருவராக தக்க வைக்க விரும்பாததாலேயே அந்த வீரரை அணி நிர்வாகங்கள் விடுவிக்கும்”

இதையும் படிங்க: ரசிகர்கள் அதிகம்.. ஓய்வு பெறுவதற்கு முன் விராட், ரோஹித் இதை செய்யனும்.. கம்ரான் அக்மல் கோரிக்கை

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் அவர்கள் ஏலத்தில் ஆர்டிஎம் விதிமுறை பயன்படுத்தி அந்த வீரரை மீண்டும் வாங்க முயற்சிக்க வேண்டும்? அது போன்ற சூழ்நிலையில் ஆர்டிஎம் விதிமுறைப்படி விலை போக விரும்புகிறீர்களா என்று நீங்கள் அந்த வீரரிடம் கேட்க வேண்டும். ஆர்டிஎம் விதிமுறைப்படி வாங்கப்படும் சம்பளத் தொகையை அந்த வீரர் முடிவு செய்வதற்கு தகுந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -