- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மன்கட் பண்ணிருந்தா இந்நேரம் தமிழ்நாடு ஜெய்ச்சுருக்கும்.. ஐடியா இல்லாத பவுலர் மீது அஸ்வின் அதிருப்தி

சயீத் முஸ்டாக் டி20 கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 28ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற எலைட் குரூப் டி பிரிவு போட்டியில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 20 ஓவரில் போராடி 198/7 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக 12 ஓவரில் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அமித் சாத்விக் 54 (40), துஷார் ரஹீஜா அதிரடியாக 72 (41) ரன்கள் குவித்து அசத்தினார்கள். மிடில் ஆர்டரில் சாய் சுதர்சன் 13, சாருக்கான் 6, ஜெகதீசன் 13, சோனு யாதவ் 5, ராஜ்குமார் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

- Advertisement -

மன்கட் செய்யாத பவுலர்:

கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட கேப்டன் வருண் சக்கரவர்த்தி 13* (5) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். டெல்லிக்கு அதிகபட்சமாக பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 203/4 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரியான்ஸ் ஆர்யா 35 (15), யாஷ் துள் 71 (46) ரன்கள் அடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.

மிடில் ஆர்டரில் கேப்டன் நிதீஷ் ராணா 34 (26), ஆயுஸ் பதோணி 41 (23) ரன்கள் அடித்து கை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் அனுஜ் ராவத் 8* (6), ஹிம்மத் சிங் 11* (4) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்தார்கள். குறிப்பாக குர்ஜப்நீத் சிங் வீசிய கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ராவத் சிக்சர் அடித்து தமிழகத்தை தோற்கடித்தார். அதை ரிப்ளையில் பார்த்த ஒரு தமிழ்நாடு ரசிகருக்கு குர்ஜப்நீத் கடைசிப் பந்தை வீசுவதற்கு முன் எதிர்ப்புறமிருந்த ஹிம்மத் சிங் வெள்ளைக்கோட்டை விட்டு 2 – 3 அடிகள் வெளியே போனது தெளிவாகத் தெரிந்தது.

- Advertisement -

அஸ்வின் அதிருப்தி:

அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த அந்த ரசிகர் ட்விட்டரில் அஸ்வினை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த அஸ்வின். “ஏன் பின்னடைவை சந்திக்கிறீர்கள். அங்கே பவுலர் எடுப்பதற்கு நிறைய இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். அதாவது அந்த இடத்தில் மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு வென்றிருக்குமே என்று அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அன்று இந்தியாவை சாய்த்ததே என் வாழ்நாள் சாதனை.. பாகிஸ்தானுக்கு அதை வெல்வதே அடுத்த லட்சியம்.. பாபர் அசாம்

முன்பெல்லாம் மன்கட் செய்வது நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அதை 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லருக்கு எதிராக செய்த அஸ்வின் அனைவரும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்த போதிலும் நீண்ட நாட்களாக அஸ்வின் வைத்த கோரிக்கையில் நியாயம் இருந்தது. அதனால் தற்போது ஐசிசியே மன்கட் அவுட்டை ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனாலும் அதைச் செய்தால் பலரும் திட்டுவார்கள் என்பதால் பவுலர்கள் செய்யத் தயங்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -