- Advertisement -
டிஎன்பிஎல்

இவ்ளோ பெரிய பிளேயரா இருந்து அஷ்வின் டி.என்.பி.எல் தொடர்ல ஆட என்ன காரணம் தெரியுமா? – விவரம் இதோ

இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 212 போட்டியில் விளையாடியுள்ளார்.

இப்படி சர்வதேச அனுபவம் கொண்ட அஸ்வின் இன்றளவும் கிரிக்கெட் விளையாடுவதில் தொடர்ந்து ஆர்வமாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் தமிழக பிரிமியர் லீக் தொடரல் இடம் பிடித்து விளையாடி வரும் அவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து தற்போது இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார்.

- Advertisement -

இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ள இந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்ற நிலையில் இருந்து தற்போது கோப்பையை நோக்கி ஒரு கால் வைத்துள்ளது.

இந்நிலையில் இப்படி சர்வதேச வீரராக இருந்து டி.என்.பி.எல் விளையாடுவது குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் கூறுகையில் : தமிழ்நாடு கிரிக்கெட் எனக்கு நிறைய செய்துள்ளது. அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகவே நான் பார்த்த உலக கிரிக்கெட்டில் சில நுணுக்கமான விடயங்களை தமிழக இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.

- Advertisement -

என்னுடைய சில அறிவுரைகள் மூலம் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் அதில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறினால் அதைவிட எனக்கு வேறு எதுவும் பெருமை இருக்காது. டி.என்.பி.எல் ஆடுவதை என் கடமையாக பார்க்கிறேன். ஏனென்றால் இளம் வீரர்கள் இங்கிருந்து தான் நாளை சர்வதேச கிரிக்கெட்டிற்கு செல்ல போகிறார்கள்.

இதையும் படிங்க : கெளதம் கம்பீரால் நீண்ட காலம் இந்தியாவின் பயிற்சியாளராக நீடிக்க முடியாது.. இதான் காரணம்.. ஜோஹிந்தர் சர்மா பேட்டி

நான் கற்றுக் கொண்ட சிறிய சிறிய விடயங்களை இவர்களுடன் பகிர்ந்து கொள்வது என் கடமை என்று நினைக்கிறேன். அவர்களுடன் ஓய்வறையில் இருக்கும் போது அவர்களின் முன்னேற்றத்திற்கும் என்னால் உதவ முடியும் அதன் காரணமாகவே நான் டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வருகிறேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -