- Advertisement -
ஐ.பி.எல்

தோனி இந்த சீசன்ல விளையாடணும்னா அதுக்கு இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு – அஷ்வின் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதை எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரே அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுடன் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கூறி வருவதால் இந்த ஆண்டு தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

தோனி எப்போது விளையாட வருவார்? : ரவிச்சந்திரன் அஷ்வின் பதில்

ஆனால் இந்த ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தனது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக காயத்தை சந்தித்த தோனி முதல் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என ஏற்கனவே சி.எஸ்.கே அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த தொடரானது ஆரம்பித்து நான்கு வாரங்கள் கடந்தும் தோனி இதுவரை சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடாதது ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியை தவறவிட்ட தோனி அதற்கடுத்து சொந்த மைதானத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் தோனி எப்போது மீண்டும் விளையாடுவார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் தோனி விளையாட எப்போது வாய்ப்புள்ளது? என்பது குறித்த கேள்விக்கு தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்த தொடரில் தோனி விளையாட வேண்டுமெனில் சி.எஸ்.கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தால் மட்டுமே அவர் விளையாட வருவார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய நட்சத்திர வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

தற்போதைக்கு சி.எஸ்.கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு உயிர்ப்புடன் உள்ளது. இது சற்று கடினமான நிலை தான் என்றாலும் இதுவரை சி.எஸ்.கே அணிக்கு பிளே ஆப் சுற்றிற்கு தகுதிபெற ஒரு வாய்ப்புள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தால் நிச்சயம் தோனி இந்த தொடரில் விளையாடுவார் இல்லையெனில் அவர் விளையாட வாய்ப்பில்லை என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -