மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய நட்சத்திர வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

MI
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக அவர்களது பிளே ஆப் வாய்ப்பு என்பது மிகக் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.

மும்பை அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

ஆகவே இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதனால் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மிகப்பெரிய சறுக்களை சந்தித்துள்ளது. இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -

இவ்வேளையில் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாக ஒரு தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த மிட்சல் சான்ட்னர் காயம் காரணமாக விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியின் போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மிட்சல் சான்ட்னர் கேட்ச் பிடிக்க முயன்ற போது தோள்பட்டையில் காயமடைந்தார். இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு காயம் தீவிரமாக இருப்பதினால் எஞ்சியுள்ள 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டிரென்ட் போல்ட்டின் சாதனையை சமன் செய்து அசத்திய புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

அவருக்கு பதிலாக மாற்று வீரராக கேஷவ் மகாராஜை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பின் வரிசையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சான்ட்னர் தற்போது விலகியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement