ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனம்திறந்த ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் முடிவை அறிவித்து அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே நட்சத்திர வீரராக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே சர்வதேச போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? : அஷ்வின் வெளிப்படை

அதனை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சென்னை அணிக்காக 10 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தனது ஆரம்ப காலகட்டத்தில் சென்னை அணிக்காக விளையாடிய பின்னரே இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு வளர்ந்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக மீண்டும் சென்னை அணிக்கு அஷ்வின் வந்ததும் அவரது செயல்பாடு மீது பலரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து சில கருத்துக்களை ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் சென்னை அணிக்காக துவங்கிய இந்த பயணத்தை அங்கேயே முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் கடந்த சீசன் மீண்டும் எனக்கு சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த தொடரானது எனக்கு ஏமாற்றமும், வலி மிகுந்ததாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : வலைப்பயிற்சியை துவங்கிய தல தோனி.. எந்த போட்டியில் கம்பேக்? – வெளியான தகவல்

என்னை விடுவிப்பதா? தக்க வைப்பதா? என்று நிர்வாகத்திற்கு நான் தலைவலியை கொடுக்க விரும்பவில்லை. அதன் காரணமாக நானே முன்கூட்டியே ஓய்வு அறிவித்தேன். நான் விலகியதால் சி.எஸ்.கே அணிக்கு பத்து கோடி ரூபாய் கிடைக்கும் அதை வைத்து நல்ல வீரர்களை அவர் எடுப்பார்கள் என்றும் தான் நம்பியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement