வலைப்பயிற்சியை துவங்கிய தல தோனி.. எந்த போட்டியில் கம்பேக்? – வெளியான தகவல்

MS Dhoni
- Advertisement -

தற்போது 44 வயதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் விளையாடும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்ட தோனி அசத்தலாக தயாராகி வந்தார்.

வலைப்பயிற்சியை துவங்கிய தல தோனி :

அதன் காரணமாக முதல் போட்டியில் இருந்து பிளேயிங் லெவனில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரானது ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் காயம் காரணமாக ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி தற்போது மெல்ல மெல்ல அந்த காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் எப்போது சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுப்பார்? என்ற கேள்வியும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக அவர் நிச்சயம் ஏப்ரல் 11-ஆம் தேதி டெல்லி அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி 11-ஆம் தேதி டெல்லி அணிக்கெதிரான போட்டியில் தோனி விளையாடினால் நிச்சயம் அந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

- Advertisement -

இதையும் படிங்க : 14 கோடி கொடுத்து எடுத்த அந்த வீரருக்கு ஏன் பவுலிங் தரமாட்றீங்க.. சி.எஸ்.கே வை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா

ஏற்கனவே சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர்ச்சியான தோல்விகளை பெற்று புள்ளி பட்டியல் கடைசியில் இடத்தை பிடித்திருப்பதால் தோனி மீண்டும் அணிக்குள் வருவது அவசியம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement