ப்ளீஸ் புவனேஷ்வர் குமாருக்கு இந்த வாய்ப்பை தாங்க.. ஆதரவு தெரிவித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin and Bhuvi
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் ஆட்டத்தின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு புள்ளி பட்டியலில் தற்போது 14 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவு தெரிவித்த ரவிச்சந்திரன் அஷ்வின் :

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது. பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி போட்டியின் கடைசி பந்தில் வெற்றிக்கோட்டை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் புவனேஸ்வர் குமார் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் :

டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் பெயர் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் கூறுகையில் : புதிய பந்தில் துல்லியமாக பந்து வீசும் அவர் டெத் ஓவர்களின் போதும் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். அதோடு அழுத்தமான வேளையிலும் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை பலருக்கும் அவர் எந்த தொடரில் வெளிகாட்டி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக மும்பை அணியின் கேப்டனாக மாறப்போகும் – 23 வயது இளம்வீரர்

நேற்றைய போட்டியின் போது மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த வேளையில் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர் துல்லியமாக பேட்ஸ்மேனுக்கு எதிராக தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி பந்துவீசும் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement