- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் செய்ததை மறந்துடீங்களா? இந்திய அணித்தேர்வினை விமர்சித்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணித்தேர்வை விமர்சித்த : ரவிச்சந்திரன் அஷ்வின்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் இந்த சூப்பர் 8 சுற்று போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருமான் அக்சர் பட்டேல் விளையாடாதது தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை அணியில் மாற்றங்களை நடத்துவது இயல்புதான், அது சரியான ஒன்றுதான். ஆனால் ஐசிசி போன்ற தொடர்களில் நிலையான அணியை வைத்திருக்க வேண்டும். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்படுவார் என்பது உண்மைதான். ஆனால் ஐசிசி போன்ற போட்டிகளில் அக்சர் பட்டேல் தான் முதன்மை வீரராக இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் இப்படி ஆனா எப்படி ஜெயிக்க முடியும்.. தோல்விக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் வருத்தம்

2024 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் அவர் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். அதுபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கே இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -