- Advertisement -
ஐ.பி.எல்

நான் சொல்லிகிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள அவுட்.. அபிஷேக் சர்மா செய்யும் தவறு குறித்து – அஷ்வின் விமர்சனம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சறுக்களை சந்தித்தது. சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் துவக்க வீரர்கள் தான் பார்க்கப்பட்டது.

அபிஷேக் சர்மா செய்யும் தவறு இதுதான் : ரவிச்சந்திரன் அஷ்வின்

ஏனெனில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரது ஜோடி அதிரடியான துவக்கத்தை அளிக்கும் பட்சத்தில் சன் ரைசர்ஸ் அணி 300 ரன்களை கூட இந்த தொடரில் எடுக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இவ்வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும், அபிஷேக் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் அந்த அணி பெரிய சரிவை சந்தித்தது.

- Advertisement -

இப்படி துவக்க ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடியதால் தான் அந்த அணி தோல்வியை சந்தித்தது என பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஆட்டம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஈரப்பதம் எப்போதுமே இருக்கும். அதனால் பந்து ஸ்விங் ஆகும். இதனை புரிந்து கொண்டு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் முதல் 6 ஓவரில் 45 முதல் 50 ரன்கள் வரை எடுத்து ஒரு விக்கட்டை மட்டும் இழந்து இருந்தால் அந்த அணி இன்னும் பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும். அதேபோன்று அபிஷேக் சர்மாவின் தீவிர ரசிகன் நான்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 வாரம் மட்டுமல்ல.. கூடுதலாக பின்னடைவை சந்திக்கும் எம்.எஸ் தோனி – வெளியான தகவல்

ஆனால் அவர் தனது ஆட்டத்தில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். பந்து வீச்சாளர்கள் எங்கே வீசப்போகிறார்கள் என்பதை சரியாக கவனிக்க வேண்டும். அவர் எங்கு பந்து வீசினாலும் அடிக்கப் பார்த்தால் இப்படித்தான் விக்கெட் விழும். நான் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவர் மோசமான ஷாட் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -