சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 46 வயதாகும் அவருக்கு இந்த 2026 ஐபிஎல் தொடரே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தோனியின் ஆட்டத்தை கடைசி முறையாக இந்த தொடரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.
தோனியின் உடற்தகுதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் :
அதன்படி ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்காக தயாராகி வந்த மகேந்திர சிங் தோனியும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதோடு தோனிக்கு சரியான மாற்றுவீராக சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்துள்ளதால் நிச்சயம் தோனி அவரிடம் தனது பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் 2026 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக தோனி கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அணியின் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இப்படி கடைசி நேரத்தில் தோனி விளையாட முடியாமல் போனது குறித்த தகவல் வெளியானதும் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு வாரங்கள் மட்டுமின்றி ஏப்ரல் மாதம் கடைசி வரை அவரால் எவ்வித போட்டிகளில் விளையாட முடியாது என்ற கூடுதல் தகவல் வெளியாகி தற்போது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 5 முறை சாம்பியன்.. ஆனால் 13 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. சாபத்திலிருந்து வெளியேறுமா? – மும்பை இந்தியன்ஸ்
ஏனெனில் கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய மேலும் காலம் ஏற்படும் என்றும் அதனால் பயிற்சியை மேற்கொள்ள கூடுதல் நாட்கள் ஆகும் என்பதனால் ஏப்ரல் மாதம் கடைசி வரை அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது. இதனால் தோனி 14 போட்டியில் கிட்டத்தட்ட 8 போட்டிகள் தவறவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.



